இலங்கை தமிழர் பிரச்சினை: பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்

LETTER TO PRIME MINISTER MANMOHAN SINGH REGARDING SRILANKAN ISSUE CHIEF MINISTER JAYALALITHA சென்னை, 15 – இலங்கை தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கும் 13 வது சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு ரத்து செய்து விடாமல் தடுக்க மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு இன்னமும் கொடுமை நிகழ்ந்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாகவே அவர்கள் சிங்கள அரசின் கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின் போதும் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். பல தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் கொல்லப்பட்டார். அவரது மகனான பச்சிளம் பாலகனும் சிங்கள வெறித்தனமான அரசால் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டான். இத்தனையும்…

Read More

பேரறிவாளன் கருணை மனு நிராகரிப்பு: மத்திய தகவல் ஆணையம்

CIC rejects Rajiv Gandhi assassination case convict A G Perarivalan’s RTI plea புதன், 10 ஜூலை 2013: புதுதில்லி முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியாக  வேலூர் சிறையில் இருக்கும், பேரறிவாளன்  குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை நீண்ட நாட்களுக்கு பிறகு நிராகரிக்கப்பட்டது.  நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அவருக்கு தெரிவிக்க மத்திய தகவல் ஆணையம் மறுத்துவிட்டது. இதை தொடர்ந்து எந்த நேரத்திலும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிர் பிரியும் நிலை இருப்பதால் தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள விரும்புவதாக வேலூர் சிறையிலிருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மத்திய தகவல் ஆணையத்திற்கு பேரறிவாளன் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை கடந்த மாதம் 26 ஆம் தேதி மத்திய தகவல் ஆணையம் நிராகரித்துவிட்டது. இதுதொடர்பாக ஆணையத்தின் தலைவர் சுஷ்மா சிங் பிறப்பித்துள்ள உத்தரவில்…

Read More

பிரதமருக்கு முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடிதம்..

jayalalitha letter to manmohan singh சென்னை, ஜூன் 9: நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் பயிற்சி பெறுவதற்காக வந்துள்ள 2 இலங்கை ராணுவ அதிகாரிகளை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.  தமிழக மக்களின் உணர்வுப்பூர்வ மான இந்த விஷயத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அவர் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இன்று அனுப்பியுள்ள நேரடி கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு: தமிழக மக்களின் உணர்வுப்பூர்வமான, மிக முக்கியமான பிரச்சனை யில் உங்கள் கவனத்தை உடனடி யாக ஈர்க்க விரும்புகிறேன்.  இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு செய்து வரும் கொடுமைகளுக்கு தமிழ்நாட்டு மக்களிடையே ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆனால் இந்திய அரசு இதனை பொருட்படுத்தாமல் இலங்கையின் 2 ராணுவ அதிகாரிகளை பயிற்சிக் காக அழைத்து இருக்கிறது.…

Read More

கச்சத்தீவு அருகே இலங்கை போர்க் கப்பல்கள்: இந்திய மீனவர்கள் அதிர்ச்சி.

srilankan navy in bay of bengal to warn Indian tamil fishermen தமிழக மீனவர்கள் யாரும் கச்சத்தீவு அருகே இந்திய எல்லையை மீறி மீன் பிடிக்க முடியாதபடி இலங்கை கப்பற்படை 4 பெரிய போர்க் கப்பல்களையும், 5 சிறிய ரோந்துக் கப்பல்களையும் நிறுத்தி வைத்திருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் மே 29-ஆம் தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாக கடைப்பிடிக்கப்பட்டு, 45 நாள்கள் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். வழக்கம் போல இந்த ஆண்டும் மீன்பிடி தடைக் காலம் முடிவடைந்து, தமிழகத்தில் இருந்து பல மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க வியாழக்கிழமை சென்றுள்ளனர். வரும் சனிக்கிழமை ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் நாளாக கடைபிடித்து வருவதால், எப்போதும் போல ஜூன் 1-ஆம் தேதி சனிக்கிழமை முதல் மீன் பிடிக்க தயாரக இருக்கும்…

Read More

தமிழ்த்தாய்க்கு சிலை, பிரபாகரன் படத்துக்கு தடை மனம் மாறிய முதல்வர், ஆவேசப்படும் சீமான், திருமாவளவன்

Tamil mother statue planned, prabhakaran pictures banned by tamilnadu government 2013வியாழன் 23 இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த நாள் 2009, மே 18. ஒட்டுமொத்த உலக நாடுகளும் இலங்கையுடன் கைக்கோர்த்து நின்று ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்துவிட்டு தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்ட நாள். அந்த யுத்தத்தில் தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்காக உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் அஞ்சலி கூட்டம் நடத்துவது இந்த நாளில் தான். இந்தநாளில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், அரங்கக்கூட்டங்கள் என அவரவர்களின் வலிமைக்கேற்ப அரசியல் கட்சிகளும், ஈழ ஆதரவு அமைப்புகளும் கடந்த 4 ஆண்டுகளாக நினைவேந்தல் கூட்டங்களை எழுச்சியாகவும் உணர்வு பூர்வமாகவும் தமிழகத்தில் நடத்தின. இந்த ஆண்டும் சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் ஈழத்தமிழினத்திற்கான வீர வணக்கக் கூட்டத்தை 17-ந் தேதி நடத்தினார் வைகோ. இதில் பழ.…

Read More

இலங்கை, 26 இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க குர்ஷித் வலியுறுத்தல்

புதுடில்லி: இந்திய வெளியுறவு அமைச்சர், சல்மான குர்ஷித், இலங்கை சிறையில் உள்ள, 26 இந்திய மீனவர்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இலங்கை அரசிடம், வலியுறுத்தியுள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்திய மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக, இலங்கை வெளியுறவு அமைச்சர் பெய்ரிஸ் உடன் தொலைபேசியில் பேசினார். குர்ஷித் – பெய்ரிஸ் தொலைபேசி பேச்சு குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாவது : இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 26 இந்திய மீனவர்களை விரைவாக விடுவிக்க வேண்டும் என்றும் 2012ல் நவம்பரில், இலங்கை கடற்படையினர், கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த, ஐந்து இந்திய மீனவர்களை, போதை மருந்து கடத்தியதாக, கைது செய்தனர். அவர்கள் அனைவர் மீதான வழக்குகளை முடித்து, விரைவாக விடுவிக்க வேண்டும் என, இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தினார். இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்

Read More

42 தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பியது ஆஸ்திரேலியா

Australia deports 42 Sri Lankan refugees கொழும்பு:  3 மே 2013: இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற 42 தமிழ் அகதிகளை ஆஸ்திரேலியா மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பியது. இலங்கையில் தங்களது வாழ்வுரிமை பாதிக்கப்பட்ட பல தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்று குடிபெயர்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியா, கனடா, நார்வே, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகமாக செல்கின்றனர். முக்கியமாக படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்லுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து தங்கள் நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேற முயற்சி செய்யும் இலங்கைத் தமிழர்களை ஆஸ்திரேலியா திருப்பி அனுப்பி வருகிறது. இந்நிலையில் 42 தமிழ் அகதிகளை ஆஸ்திரேலிய அரசு வியாழக்கிழமை மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பியது. ஆஸ்திரேலியா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் இதுவரை   சுமார் 1000 அகதிகளை இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. Australia deports 42 Sri Lankan refugees Colombo: Australia deported 42 Sri Lankan asylum…

Read More

பிரபுதேவா – சிங்கள நடிகை ஒப்பந்தம். பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு

Sri Lankan actress Jacqueline Fernandez சென்னை: பிரபுதேவா இயக்கி வரும் இந்திப் படமான ராமைய்யா வொஸ் தாவைய்யா படத்தில் இரண்டாம் கதா நாயகியாக சிங்கள நடிகையான ஜாகுலின் பெணான்டஸ் என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளதால், பிரபுதேவாவிற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது. இப் படத்தில்  நடிகர் கிரிஷ்குமார் ஹீரோவாக நடிக்க, நடிகை ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். சிங்கள நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் மற்றொரு ஹீரொயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழர்களை கொன்று குவித்த சிங்களத்திற்கு, தமிழர்கள் மற்றும் தமிழ் திரையுலகைச் சார்ந்தவர்கள் யாரும் செல்லக்கூடாது என்றும் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்குபெறக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  சிங்கள நடிகையை  பிரபு தேவா தனது படத்தில் நடிக்க வைப்பதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. Sri Lankan actress Jacqueline Fernandez Flats sale in Chennai Ayanambakkam

Read More

இலங்கையில் தமிழர் நிலங்களைப் பறிப்பதைத் தடுக்க நிறுத்த வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்

 Lankan army illegally encroaching lands of Tamils 26 ஏப்ரல் 2013: இலங்கையில் தமிழர் நிலங்கள் சிங்கள ராணுவத்தால் பறிக்கப்படுவதை மத்திய அரசு உடனடியாக தடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக துபாயில் இருந்து 19 ஈழத் தமிழர்களை கொழும்புவுக்கு அனுப்பாமல் காப்பாற்றியதற்காக மத்திய அரசுக்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் கருணாநிதி நன்றி தெரிவித்து,இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:- இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் அளவு கட்டுகடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. தமிழர்களுக்குச் சொந்தமான 6,381 ஏக்கர் நிலங்கள் சிங்கள ராணுவத்தினரால் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 1990-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதி சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தது முதல் தொடர்ந்து இந்த ஆக்கிரமிப்பு நடைபெற்று வருகிறது. இலங்கையில் போர் முடிவுற்ற பின்பும், அந்த நிலங்கள் தமிழர்களிடம் திருப்பி ஒப்படைக்கப் படவில்லை. தற்போது சிங்கள ராணுவமே அந்த நிலங்களைச் சொந்தமாக்கிக் கொள்வதற்கான உத்தரவினை சிங்கள அரசு பிறப்பித்துள்ளது.…

Read More

இலங்கையில் காமன்வெல்த் கூட்டத்தை நடத்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு எதிர்ப்பு

Commonwealth summit 26 ஏப்ரல் 2013: இலங்கையில் வரும் நவம்பர் மாதம் காமன்வெல்த் நாடுகளின் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்துக்கான நிகழ்ச்சிகள் பற்றி விவாதிப்பதற்காக காமன்வெல்த் நாடுகளின் அமைச்சக நிலையிலான பிரதிநிதிகளின் கூட்டம் லண்டனில் வெள்ளிக்கிழமை (இன்று ) நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில் இலங்கையில் கூட்டத்தை நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் ஆசிய பிரிவு இயக்குநர் பிராட் ஆடம்ஸ் கூறியது: காமன்வெல்த் நாடுகளின் அமைச்சக நிலை பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில், காமன்வெல்த் நாடுகளின் மதிப்பை குலைக்கும் வகையில் இலங்கை செயல்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் எங்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை என்று முடிவெடுத்து அந்நாட்டு அரசுக்கு செய்தி அனுப்ப வேண்டும் என்றார். இலங்கையில் போர் நடைபெற்றபோது நிகழ்ந்த மனித உரிமை மீறல் பிரச்னைகளை மையமாக வைத்தும், இலங்கையில் மனித உரிமைகளைக் காக்க…

Read More