அக்டோபர் 10 உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்

October 10 – World Day Against the Death Penalty உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு என்ற அமைப்பு இந்நிகழ்வை முன்னெடுத்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில் தற்போது மரண தண்டனை வழங்கப்படுவதில்லை. குற்றம் புரிந்தவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளில் மிக கொடுமையான தண்டனையான மரண தண்டனையைக் கொண்டுள்ள சில நாடுகளும் அதைக் கைவிட வேண்டும் என்ற நோக்கிலே “மரண தண்டனை எதிர்ப்பு நாள்” கடைபிடிக்கப்படுகிறத 2002 மே 13 இல் ரோம் நகரில் கூடிய “மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு” என்ற அரச சார்பற்ற அமைப்புகளின் கூட்டத்தில் மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின் 2003…

Read More

இன்று சந்திரகிரகணம் இந்தியாவில் கடற்கரை நகரங்களில் காண முடியும்

Total lunar eclipse to be partially visible in India இயற்கை அதிசயங்களில் ஒன்றான சந்திர கிரகணம் இன்று மாலை நிகழ்கிறது. இவ்வாண்டில் நிகழவிருக்கும் இரண்டாவது சந்திர கிரகணம் இதுவாகும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் பொழுது, பூமியின் நிழல், சந்திரன் மீது விழுவது சந்திர கிரகணம் என்றழைக்கப்படுகிறது. இன்று நிகழும் முழு சந்திர கிரகணத்தால், சந்திரன் கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும் என்று மும்பை நேரு கோளரங்கம் தெரிவித்திருக்கிறது. கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாலை 5.54 நிமிடங்களுக்கு நிகழவிருக்கும் முழு சந்திர கிரகணம் 11 நிமிடங்கள் மட்டுமே தென்படும். Total lunar eclipse to be partially visible in India A total lunar eclipse, the second and last one of this year,…

Read More

இன்று கூகுள் தனது 16வது பிறந்தநாளை கொண்டாடுகிறது

Google’s 16th Birthday: The Internet giant wishes itself with a cute doodle இணைய உலகின் மிகச்சிறந்த தேடு பொறியாக விளங்கும் கூகுள் இன்று தனது 16வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதற்காக தனது லோகோவில் “O” எழுத்தும் “L” எழுத்தும் வளர்ந்திருப்பதுபோல் சிம்பிளாக லோகோவை வடிவமைத்துள்ளது. லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோரால் 1998ம் ஆண்டு துவங்கப்பட்ட கூகுள் சேவை உலகம் முழுவதும் ஒரு மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் “தீமைத் தன்மை இல்லாதிருத்தல்” என்பது கூகுளின் அதிகாரப்பூர்வமற்ற நோக்காக அறியப்படுகிறது. அதனுடன் 30,000 மேற்பட்ட ஊழியர்களை நாடு முழுவதும் வளர்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த 16 வருடங்களில் கூகுள் அறிமுகபடுத்தியவை எவை, மற்றும் கூகுள் தொடர்பானவற்றை எமது சில முன்னைய பதிவுகளில் காணலாம். கூகிளிற்கு 15 வயது :…

Read More

நவம்பருக்குள் எபோலாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரமாக உயரும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது

Ebola cases to triple by November unless efforts raised ‘எபோலா வைரஸ் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தாவிட்டால், இன்னும் இரண்டு மாதங்களில், இந்நோய்க்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 20 ஆயிரமாக உயர்ந்து விடும்; நோயை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம்’ என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து, அந்த அமைப்பு தெரிவித்துஉள்ளதாவது:மேற்கு ஆப்ரிக்க நாடுகளான, கினியா, சியாரா லியோன், லைபீரியா, நைஜீரியா ஆகிய நாடுகளில், எபோலா நோய் தாக்குதல் உள்ளது. இது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நோய்க்கு, 2,800 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில், 5,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நோயை கட்டுப்படுத்த இன்னும் ஸ்திரமான நடவடிக்கைகள் இல்லாததால், வரும் இரண்டொரு மாதங்களில், இந்நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் எண்ணிக்கை, 20 ஆயிரத்தை தாண்டக் கூடும். நோய் தாக்கியவர்களில், 71 சதவீதம் பேர் பலியாகியுள்ளதால், இறப்பு அதிகரிக்க அதிக…

Read More

அமெரிக்காவில் காதலியை கொன்று மூளை, இதயத்தை சாப்பிட்ட கோடூர காதலன்

Psycho cannibal killer stabs lover to death then eats her brain, heart and lungs அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சேர்ந்த ஜெப்பர் ஜோன்வில்லி பகுதியை சேர்ந்தவர். டாம்மி ஜோ பிளாண்டன் (வயது 46). சம்பவத்தன்று பிளாண்டன் போலீசாரை அழைத்து உள்ளார். உடனடியாக போலீசார் அவரது வீட்டுக்கு சென்று உள்ளனர். பிளாண்டன தனது முன்னாள் காதலன் தனது வீட்டை உடைத்து சேதப்படுத்தியதாக புகார் கூறிஉள்ளார். இதை தொடர்ந்து போலீசார் அவரது காதலர் ஜோசப் ஒபர்கென்சலே (வயது33) எனபவரை தேடி வந்தனர். இந்த நிலையில் மீண்டும் பிளாண்டன் போலீசாருக்கு அழைப்பு விடுத்தார். இந்த முறை போலீசார் சென்று பார்த்தபோது பிளாண்டன் வீட்டில் இல்லை. சிறிது நேர தேடுதலுக்கு பிறகு பிளாண்டனின் உடல் ரத்த வெள்ளத்தில் குளியல் தொட்டியில் கிடந்து உள்ளது. உடனடியாக போலீசார் பிளாண்டனின் உடலை…

Read More

நியூயார்க் நகர நிர்வாகம் இந்திய வம்சாவளி மாணவிக்கு 2,25,000 டாலர் நஷ்டஈடு அளித்துள்ளது

New York city to pay $225,000 to Indian girl to settle lawsuit தவறான குற்றச்சாட்டுகளுக்கு நஷ்டஈடாக, இந்திய வம்சாவளி மாணவிக்கு 2,25,000 டாலர் கொடுத்தது நியூயார்க் நகர நிர்வாகம். இந்தியாவைச் சேர்ந்த கிருத்திகா பிஸ்வாஸ் என்ற மாணவி கடந்த 2011 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் உள்ள குவீன்ஸ் ஜான் பிரவுன் என்ற பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒருநாள் அவரது வகுப்பு ஆசிரியருக்கு ஆபாச மின்னஞ்சல்களை அனுப்பியதான சந்தேகத்தின்பேரில் காவல் துறையினர் அவரை கைது செய்து ஒரு நாள் முழுவதும் காவலில் வைத்திருந்தனர். இதைத் தொடர்ந்து பள்ளியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்த கிருத்திகா தன்மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கு நஷ்டஈடாக 1.5 மில்லியன் டாலர்கள் கோரியிருந்தார். இந்த வழக்கு குறித்த விசாரணைகள்…

Read More

பாகிஸ்தானில் தாமதமாக வந்த அமைச்சரை விமானத்திலிருந்து இறக்கிய பயணிகள்

Pak politicians ejected out of plane for causing delay பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் ஒருவரும், எம்.பி ஒருவரும் விமானத்திற்கு தாமதமாக வந்ததால் பயணிகளால் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ரமேஷ் குமார் வக்வானி ஆகியோர் விமானம் ஏறுவதற்கு காலதாமதமாக வந்தனர். இதனால் விமானத்தில் ஏறிய இருவரும் பயணிகளால் இறக்கி விடப்பட்டனர். பாகிஸ்தான் விமானம்: கராச்சி விமான நிலையத்தில் இருந்து இஸ்லாமாபாத் செல்லும் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு புறப்படத் தயாராக இருந்தது. 2 மணி நேரம் காத்திருப்பு: அதில் சுமார் 250 பயணிகள் ஏறி அமர்ந்த நிலையில், அதில் பயணம் செய்யும் முன்னாள் அமைச்சர்…

Read More

உலக ஓசோன் பாதுகாப்பு நாள்

world ozone day சூரியனின் புறஊதாக் கதிர்வீச்சு ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகளில் இருந்து பூமிப் பந்தில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பது ஓசோன் படலம். அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், செப்டம்பர் 16-ம் தேதியை ஓசோன் படலப் பாதுகாப்பு நாளாக ஐ.நா. அறிவித்துள்ளது. ஓசோன் படலம் சிதைந்து வருவதைத் தடுக்க வேண்டும் என்றும் 1970களில் விஞ்ஞானிகள் குரல் கொடுத்தனர். ஹாலந்தைச் சேர்ந்த பால் குருட்சன், ஓசோன் படலத்துக்குப் பாதிப்பு ஏற்படுவதைக் கண்டறிந்தார். அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் குளோரோ புளூரோ கார்பன்கள் (Chloro fluro carbons – CFC), மிதைல் குளோரோபார்ம் போன்ற வேதிப்பொருள்கள் ஓசோன் படலத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவது தெரிந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உருவான சில கருவிகளே அந்த வேதிப்பொருட்களை வெளியிட்டன. கனடா நாட்டிலுள்ள மாண்ட்ரீல் நகரில் 1987-ம் ஆண்டு…

Read More

சக்திவாய்ந்த சூரியப் புயல் பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகள் தகவல்

Strong solar storm heading to Earth, say scientists மணிக்கு 2.5 மில்லியன் மைல் என்ற வேகத்தில், சக்திவாய்ந்த சூரியப் புயல் பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மணிக்கு 2.5 மில்லியன் மைல் என்ற வேகத்தில் சூரியப் புயல் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய சக்திவாய்ந்த சூரியப் புயல் பூமியை நோக்கி வருகிறது என்று கொலராடோவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பெர்ஜர் கூறியுள்ளார்.  இதனால் தகவல் தொடர்பு மின்சார பரிமாற்றங்கள் பாதிக்ககூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சூரியனிலிருந்து அதிசக்தி வாய்ந்த வெப்பம் வெளிப்படும்போது புயலாக மாறி அண்ட வெளியில் அவ்வப்போது பரவி வருகிறது. பொதுவாக சூரியப் புயல்கள் சூரிய சுழற்சியின் உச்சத்தில் ஏற்படுவது. இவை மக்களுக்கு எந்த தீங்கும் விளைவிப்பதல்ல. ஆனால் இம்முறை, சூரியனில் பெரும் காந்த…

Read More

லச்சகணக்கான கூகுள் பயனாளர்களின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டுகள் திருட்டு

4.93 Million Gmail Accounts Hacked: Check If Yours Is Safe ரஷ்யாவை சேர்ந்த ‘ஹேக்கர்’ (தகவல் திருட்டு) ஒருவர் 4.93 மில்லியன் கூகுள் கணக்குகளை ஹேக் செய்து அவற்றின் பாஸ்வேர்டு மற்றும் யூசர்நேம்களை ஆன்லைனில் போஸ்ட் செய்திருப்பது பீதியை கிளப்பியுள்ளது. உங்களுடைய ஜிமெயில், கூகுள் பிளஸ், கூகுள் டிரைவ், ஹேங் அவுட், யூடியூப் போன்ற கூகுள் கணக்குகள் பாதுகாப்பாக உள்ளதா? என்பதை அறிய https://isleaked.com/en என்ற லிங்க்-ஐ கிளிக் செய்து அதில் உங்கள் ஜிமெயில் ஐ.டியை கொடுங்கள். உங்களுக்கு ஜிமெயில் முகவரியை பதிவு செய்ய விருப்பமில்லை எனில் அதிலுள்ள கடைசி 3 எழுத்துக்களை மட்டும் விட்டுவிட்டு பதிவு செய்யலாம். நீங்கள் பதிவு செய்த பெயரிலுள்ள அனைத்து இமெயில் கணக்குகளையும் இந்த இணையதளம் பட்டியலிடும். அவற்றில் உங்கள் இமெயில் முகவரி இருந்தால் உங்கள் அக்கௌண்ட் ஹேக்…

Read More