Shah Rukh Khan 2nd richest celebrity in the world, beats out Johnny Depp and Tom Cruise
உலகின் இரண்டாவது பெரிய பணக்கார நடிகர் என்ற பெருமையை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பெற்றுள்ளார். வெல்த் எக்ஸ் நிறுவனம் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர்களில் பணக்காரர்களாக உள்ளவர்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் ஒரே இந்திய நடிகர் ஷாருக்கான் தான்.
ஹாலிவுட் நகைச்சுவை நடிகரான ஜெர்ரி சீன்ஃபீல்டு தான் உலகின் பணக்கார நடிகர் ஆவார். அவரின் சொத்து மதிப்பு 820 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
உலகின் இரண்டாவது பணக்கார நடிகர் ஷாருக்கான். நடிகர், தயாரிப்பாளர் மற்றும் ஐபிஎல் அணி உரிமையாளர் என்று பல முகம் கொண்ட ஷாருக்கின் சொத்து மதிப்பு 600 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
ஹாலிவுட் ஹீரோ டாம் க்ரூஸ் உலகின் மூன்றாவது பணக்கார நடிகர். அவரிடம் 480 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
ஹாலிவுட் நடிகர்களான டெய்லர் பெர்ரி மற்றும் ஜானி டெப் ஆகியோர் உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் 4 மற்றும் 5வது இடத்தை பிடித்துள்ளனர். அவர்கள் இருவரிடமும் தலா 450 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
ஹாலிவுட் நடிகர்களான ஜாக் நிக்கோல்சன்(400 மில்லியன் டாலர்), டாம் ஹேன்க்ஸ்(390 மில்லியன் டாலர்) மற்றும் கிளின்ட் ஈஸ்ட்வுட்(370 மில்லியன் டாலர்) ஆகியோர் 6, 7 மற்றும் 9வது இடங்களை பிடித்துள்ளனர்.
Shah Rukh Khan 2nd richest celebrity in the world, beats out Johnny Depp and Tom Cruise
Shah Rukh Khan is the lone Indian celebrity to have made it to the top-ten wealthiest actors, beating Tom Cruise and Johnny Depp. The 48-year-old actor, who is the owner of an IPL team and has acted in more than 50 Bollywood films, has an estimated fortune of $600 million. He is second on the list put out by Wealth-X, a leading research firm that prospects ultra-high-net-worth individuals. Comedian Jerry Seinfeld tops the list with a net worth of $820 million. Mr. Cruise is at number three with $480 million, while Mr. Depp and the multifaceted Tyler Perry are fourth and fifth respectively with an estimated $450 million each. The list includes several Academy Award winners including Jack Nicholson ($400 million), Tom Hanks ($390 million) and actor Clint Eastwood ($370 million). Mr. Nicholson is at number six followed by Mr. Hanks, comedian Bill Cosby, Mr. Eastwood and actor Adam Sandler. Wealth-X uses a proprietary business valuation model to assess all asset holdings — including privately and publicly held businesses and investible assets — to develop the net worth valuation.