Karnataka, Kerala Cong CMs to skip Modi’s swearing-in, Jaya keeps up suspense
மோடி பதவியேற்பு விழாவில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்ளப் போவது இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றுக் கொள்கிறது. நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்கிறார். இந்த விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதால் தமிழக முதல்வர் ஜெயலலிதா விழாவை புறக்கணிப்பதோடு பிரதிநிதியையும் அனுப்ப மாட்டார் என்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் பெங்களூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டி இருப்பதால் கர்நாடக முதல்வர் சித்தராமையா மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே ஒப்புக் கொண்ட வேலைகள் இருப்பதால் கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை டெல்லி செல்லும்போது சாண்டி மோடியை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேரளா மற்றும் கர்நாடக முதல்வர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Karnataka, Kerala Cong CMs to skip Modi’s swearing-in, Jaya keeps up suspense
Congress chief ministers of Karnataka and Kerala are not attending tomorrow’s swearing-in of Narendra Modi as Prime Minister while reports said that Tamil Nadu Chief Minister J Jayalalithaa has decided to boycott it.