மலேசியா சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பிய ஒரு ரசிகரை பளார் என்று அறைந்த சம்பவம் தமிழர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் நடித்து வரும் படம் “சகாப்தம்”. இந்த படத்திற்கான படப்பிடிப்பிற்கு இடம் பார்ப்பதற்காக மலேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கோத்தகினபாலு என்ற பகுதிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார் விஜயகாந்த். அங்கு அமைந்துள்ள சுதேரா துறைமுக ரிசார்ட்டில் தங்கியிருந்த அவர்கள், அங்குள்ள கடைவீதியில் இருக்கும் தமிழ்மக்களிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பிரேமலாதா அவர்களிடம் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பினால் மறுநாள் வாருங்கள் என்று கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த 6 தமிழர்கள் மறுநாள் காலையில் ரிசார்ட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது பிரேமலதா அங்கு இல்லை. விஜயகாந்த் வெளியில் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளார். புகைப்படம் எடுக்கச் சென்ற அவர்கள் விஷயத்தை கூறியதும் அவரும் ஒப்புக் கொண்டதால் இரண்டு, இரண்டு பேராக நின்று அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். இந்நிலையில் காரைக்குடியைச் சேர்ந்த ஷாஜகான் என்பவர் விஜயகாந்துடன் மீண்டும் புகைப்படம் எடுத்துக் கொள்ள முயன்றார். இந்நிலையில் திடீரென்று கோபத்தின் உச்சிக்கு சென்ற விஜயகாந்த் போட்டோ எடுத்து விளையாடுறியா? என்று ஷாஜகானுக்கு விட்டார் ஒரு அறை. இதில் அதிர்ச்சி அடைந்த ஷாஜகான் அப்படியே தரையில் அமர்ந்துவிட்டார். அப்போது அங்கு வந்த பிரேமலதா விஷயத்தை அறிந்து ஏன் இப்படி செய்தீர்கள் என்று கோபமாக கேட்டுள்ளார். அதற்கு விஜயகாந்த் கூலாக இப்போ மன்னிப்பு கேட்கணும் அவ்ளோதான…ஸாரி என்று கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டுள்ளார். நாடு கடந்து வந்த விஜயகாந்துடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு வந்தால் இப்படியா அறைவார் என்று மலேசிய தமிழர்கள் வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related posts
துாத்துக்குடி: வக்கீலை அவதூறாக பேசிய பெண் எஸ்.ஐ., பெண் காவலர் மீது வழக்குப் பதிவு
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வழக்கறிஞர் முத்துசாமி என்பவரை அவதூறாக பேசியதாக, பெண் உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்சி மற்றும் பெண்...தீவிர சைபர் கிரைம் & நிதி மோசடிக்கான மையப்படுத்தப்பட்ட விசாரணை
சென்ட்ரல் க்ரைம் பிராஞ்ச் (சிசிபி) இப்போது சென்சிடிவ் வழக்குகளில் முன்னணியில் இருப்பதால், சைபர் கிரைம் மற்றும் பொருளாதாரக் குற்றங்களைச் சமாளிப்பதற்கான அணுகுமுறையை...புதிய கிரிமினல் மசோதாக்கள் சட்ட வல்லுனர்களிடமிருந்து மாறுபட்ட எதிர்வினைகளைப் பெறுகின்றன
“காலனித்துவ ஆதிக்கத்தை” முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 11 அன்று மூன்று...