Australian Research center has warned drought risk in India
இந்தியாவில் கடும் வறட்சி ஏற்பட வாய்ப்புல்லதாக ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
இந்த ஆண்டு எல்-நினோ என்று அழைக்கப்படும் வெப்ப நீரோட்டத்தின் காரணமாக இந்தியாவில்பருவமழை குறைந்து, கடும் வறட்சி ஏற்படும் அபாயமுள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்தியவின்வானிலை மாற்றங்களை பசிபிக் கடலின் மேற்பரப்பின்வெப்பம் தான் தீர்மானிக்கிறது. இவ்வெப்ப நிலை சீராக இருந்தால்தான், இந்தியாவின் வானிலை நன்றாகஇருக்கும். இல்லையென்றால் கடும் வறட்சி, அல்லது அதிக மழை பொழிவு உண்டாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பருவநிலை,மேற்கு பசிபிக் கடலோரபகுதியின்வெப்ப நிலைமற்றும் கடல் அழுத்தத்தையும்கணக்கிட்டு தான் கணிக்கப்படுகிறது.
தள்ளிப்போகியுள்ள பருவமழை:
இந்த ஆண்டு புவி வெப்பம் அதிகரித்துள்ளதால், எல்-நினோ எனப்படும் வெப்ப நீரோட்டத்தின் வெப்ப அளவு வழக்கத்திற்கு மாறாக வெப்பமாக உள்ளது. இந்தியாவில்,இந்த ஆண்டிற்க்கான தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது, ஆனால் இதுஎதிர்பார்த்த அளவுஇல்லை. வழக்கமாக, வட மாநிலங்களில் ஜுன் கடைசி வாரத்தில் துவங்கும் மழை,இந்த ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் தான் தொடங்கியுள்ளது.
ஆஸ்திரேலியவானிலை ஆய்வு மையம் அறிக்கை:
இந்நிலையில்,எல்-நினோவின் வெப்பநிலை இந்த ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது., எல்-நினோவின் இந்நிலைப்பாட்டால்இந்தியாவின் பருவமழை பாதிக்குமோ என்றுஅச்சம்உள்ளது. இதைக்குறித்து ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் ஒருஅறிக்கையில் கூறியாவது, ‘தற்போது வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால்எல்-நினோ வழக்கத்திற்கு முன்னதாகவே உருவாகி,நீண்ட நாட்கள் இருந்து, பருவநிலையில் பெரிதும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். இம்மாற்றங்கள் ஒவ்வொரு மூன்று அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறைதான்ஏற்படும். இச்சமையங்களில், இந்தியாவின் பருவமழை குறையும்’. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை பொழிவு குறையும் என்று இந்தியவின்வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை இதை உறுதிப்படுத்துகிறது.
Australian Research center has warned drought risk in India
Australian research center has announced there is a high possibility for the drought risk in India. El – Nino called the heat flux temperature has increased this year than usual due the changes in the atmosphere. This increase in the heat flow will change usually once a 3 or 5 years. During these days India’s Monsoon will change usually but due to this excess heat flow of El – Nino, there is a possibility of Drought in India. Also the Indian weather research center has announced the rainfall will be reduced in this south-west monsoon period, which confirms the announcement of drought in India.
For DTCP Approved Plots, contact 9952984848