Earth-like planet raises hope of life in space
மெரிக்கா வானியல் ஆராய்ச்சியாளர்கள் நட்சத்திர மண்டலங்களுக்கு இடையில் புவியில் இருந்து 3000 ஒளி ஆண்டுகள் தொலைவில் கண்டுபிடித்துள்ள புதிய கிரகமானது வாழ்வாதாரத்தைக் கொண்டு விளங்குவதாக தெரிய வந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பின் மூலமாக புவியைப் போலவே அமைப்புடைய வேறு சில கிரகங்களும் அண்டத்தில் இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. மேலும், அவை புவிக்கு மிக அருகிலேயே இருக்கவும் சாத்தியக்கூறுகள் நிலவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புவியை விட இரண்டு மடங்கு அதிக எடை கொண்ட இந்தக் கிரகமானது இரட்டை நட்சத்திரக் கூட்டத்தில் ஒரு நட்சத்திரத்தினை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றது. மேலும், அந்த நட்சத்திரத்திற்கும், புதிய கிரகத்திற்கும் உள்ள தொலைவானது கிட்டதட்ட சூரியன் மற்றும் புவிக்கு இடையிலான தொலைவு போன்றே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், புதிய கிரகம் சுற்றிவரும் நட்சத்திரமானது சூரியனைவிட சிறிதளவு வெம்மை குறைந்தது என்ற காரணத்தினால் இக்கிரகமானது புவியைவிட சற்று குளிர்ச்சியாக இருக்கும்.
” புவியை விடக் குளிர்ச்சியான இக்கிரகமானது, சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை புவி அமைந்திருக்கும் நட்சத்திரக் கூட்டத்திலேயே சுற்றி வருவது “உயிர்வாழும் அமைப்பு” அதாவது மக்கள் உயிர்வாழ்வதற்கான காரணிகளைக் கொண்ட இடமாகக் கருதப்படுகின்றது” என்று ஓகியோ மாகாண பல்கலைக்கழக வானியல் துறை பேராசிரியர் ஸ்காட் காவ்டி கூறியுள்ளார். இந்த கண்டுபிடிப்பானது வருங்காலத்தில் மேலும் உயிர்வாழத் தகுதியான இடங்களைக் கண்டறிய ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். ” அண்டத்தில் இதுபோன்று இரட்டை நட்சத்திர அமைப்பில் முக்கால்வாசி நட்சத்திரங்கள் அமைந்துள்ளன. இதுபோன்ற கிரகங்கள் இன்னும் இருக்குமா என்பதைப் பற்றிய வேறு தகவல்கள் ஏதும் இல்லை” என்று மேலும் கூறியுள்ளார்.
கண்டறியப்பட்டுள்ள இப்புதிய கிரகமானது ஓக்ளி-2013 என்று அழைக்கப்படுகின்றது. முதலில் சிறிதளவாக ஓக்ளி எனப்படும் டெலஸ்கோப் மூலம் கண்டறியப்பட்டுள்ளதால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனுடைய முழுமையான ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த கிரகமானது புவியைப் போன்றே, 90 மில்லியம் மைல்கள் தொலைவில் நட்சத்திடம் ஒன்றை சுற்றி வருகின்றது தெளிவாகியது. இதன்மூலமாக சரியான வெப்பநிலையுடன் உயிர்வாழத்தகுதிவாய்ந்த மேலும் கிரகங்கள் கண்டறியப்படலாம் என்று ஓகியோ பல்கலைக்கழக பேராசிரியர் ஆண்ட்ரோ தெரிவித்துள்ளார்.
Earth-like planet raises hope of life in space
Astronomers have discovered a new planet in a binary star system located 3,000 light-years from the Earth that may help them find planets harbouring life. The discovery provides the first evidence that terrestrial planets can form in orbits similar to the Earth, even in a binary star system where the stars are not very far apart.At twice the mass of the Earth, the planet orbits one of the stars in the binary system at almost exactly the same distance from which the Earth orbits the sun. However, because the planet’s host star is much dimmer than the sun, the planet is much colder than the Earth – “a little colder, in fact, than Jupiter’s icy moon Europa.” “Although this planet itself is too cold to be habitable, the same planet orbiting a sun-like star in such a binary system would be in the so-called ‘habitable zone’ – the region where conditions might be right for life,” said Scott Gaudi, a professor of astronomy at Ohio State University. This greatly expands the potential locations to discover habitable planets in the future. “Half the stars in the galaxy are in binary systems. We had no idea if Earth-like planets in Earth-like orbits could even form in these systems,” he added. The planet, called OGLE-2013-BLG-0341LBb, first appeared as a “dip” in the line tracing the brightness data taken by the OGLE (Optical Gravitational Lensing Experiment) telescope. This detailed analysis showed that the planet is twice the mass of the Earth and orbits its star from an Earth-like distance of around 90 million miles. “This discovery suggests that there may be many more terrestrial planets out there – some possibly warmer, and possibly harbouring life,” said professor Andrew Gould of the Ohio State University in a paper published in the journal Science.