Rail Engine got fire suddenly in Uttar Pradesh
உத்தரபிரதேச ரயில் என்ஜினில் திடீர் தீ
நேற்று முன்தினம் இரவு உத்தரபிரதேசத்திலிருந்து புறப்பட்ட கோண்டா–பரெய்லி எக்ஸ்பிரஸ் ரெயில், ரிசியா என்ற இடத்தில் இரவு 10.30 மணிக்கு என்ஜினில் திடீரென தீ பிடித்தது. இப்படி திடீரென பற்றிய தீயால் ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் அச்சம் அடைந்தனர். சில பயணிகள் பீதியில் ரெயில் பெட்டிகளிலிருந்து வெளியே குதித்தனர்.
இத்தகவலை அறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த ரெயில்வே அதிகாரிகளும், தீயணைப்பு படையினரும் என்ஜினில் பிடித்த தீயை 2 மணி நேரம் போராட்டத்திற்க்கு பிறகு அணைத்தனர். அதன்பின் மற்றொரு என்ஜினை பொருத்தி இரவு 2.55 மணியளவில் கோண்டா-பரெய்லி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இச்சம்பவத்தில் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லையென்றும் மேலும் இதைப் பற்றி உரிய விசாரணை மேற்க்கொல்லப்படும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் கூறினர்.
Rail Engine got fire suddenly in Uttar Pradesh
Day before yesterday night Gonda – Bareilly Express Rail engine got fire around 10.30 P. M. when it reached riciya. Passengers got afraid due to this sudden fire and even some passengers got down from the running train in fear. Railway officers along with the Fire mens reached to the accident place as soon as the information was passed. After 2 hours of struggle, they stopped the fire in the engine. New engine was attached to the train and later the Gonda – Bareilly Express starts around 2.55 A.M. Railway officers informed that there is no injury occurred to the passengers and quick actions will be taken to find out the reasons.
Advertisement: To purchase government approved plots, click here