Heart passed 14 Km distance within 8 minutes
வங்கி பெண் ஊழியரின் மூளைச்சாவு நிலையை அடைந்ததால், அவரது உடல் உறுப்புகளுல்ஆறு உறுப்புகள் தானம் பெறப்பட்டது. சென்னை மணப்பாக்கத்தில் இருந்து, அவரது இதயத்தை, 8 நிமிடங்களில்,14 கி.மீ., தூரத்தைக்கடந்து, முகப்பேருக்குகொண்டுச்செல்லப்பட்டது.
மூளைச்சாவு நிலை:
எப்சிபா, வயது 22, இவர் சென்னை பாடியைச் சேர்ந்த,தனியார் வங்கி ஊழியர். இவர், உதயம் தியேட்டர் அருகே, கடந்தஜூலை, 27ம் தேதி மாலை, விபத்தில் சிக்கி, பலத்த காயம் அடைந்து, சென்னை, ‘மியாட்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சையும்பலனின்றி, மூளைச்சாவு நிலையை அடைந்தார்.இதையடுத்து, அவரின்குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை, தானம் அளித்தனர். இதையடுத்து, அறுவைச் சிகிச்சை ‘மியாட்’ மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு, நடந்தது. இதில், இதயம், கண்கள்,சிறுநீரகங்கள், மற்றும் கல்லீரல் என, ஆறு உறுப்புகள் தானம் பெறப்பட்டது.
8 நிமிடத்தில் 14 கி.மீ., தூரத்தைக் கடந்த இதயம்:
முகப்பேரிலுள்ள, ‘பிரான்டியர் லைப் லைன்’ மருத்துவமனைக்கு அவரின் இதயம், தரப்பட்டது. மணப்பாக்கதிலுள்ள, ‘மியாட்’மருத்துவமனையிலிருந்து, பிரத்யேக ஆம்புலன்ஸ்சில் நள்ளிரவு 12:30 மணிக்கு, புறப்பட்ட இதயம், 8 நிமிடங்களில்,14 கி.மீ., தொலைவை கடந்து, முகப்பேரிலுள்ளதனியார் மருத்துவமனையைச் சென்றடைந்தது. சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்து போலீசார், ஒத்துழைத்தனர்.அமலரூபாவாணன்,அரசுஉடல் உறுப்புதான இயக்க ஒருங்கிணைப்பாளர், ”மியாட்’ மருத்துவமனை,ஒரு சிறுநீரகம் மற்றும்கல்லீரலை, எடுத்துக் கொண்டது. சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மற்றொருசிறுநீரகமும், சங்கர நேத்ராயலாவுக்கும் இரண்டு கண்களும்தரப்பட்டன. இதன்மூலமாக, ஆறு பேருக்கு மறுவாழ்வு கிடைக்கும்,” என்று கூறினார்.
Heart passed 14 Km distance within 8 minutes
6 Organs were donated from the Brain Death attained Bank Employee in Chennai. From Chennai, Manapakkam, heart has reached Mogappair by crossing 14kms within 8 minutes. Epsiba, age 22, a Private Bank Employee lived in Chennai. On 27th July, evening Epsiba got into an accident and got heavy injury near Udhayam Theatre. She was admitted in the Miot Hospital. But even after the treatment, she went to Brain Death Stage. Later, her relatives decided to donate her organs. On 28th July night, operation was taken place in the Miot Hospital. In this, Heart, Eyes, Kidneys and Liver were given as donation. Her Heart was given to the Mogappair, “Frontier Lifeline Hospital”. So from Manapakkam, Miot Hospital around 12.30 P.M. through separate ambulance the heart was taken to the Mogappair within 8 minutes with the help of Traffic Control Officers. Amalarupavanan, Government Organ donation organizer said as follows, “Miot Hospital has taken 1 Kidney and liver. One Kidney was given to the Chennai Government General Hospital and 2 Eyes were given to the Sankara Nethralaya. Through this 6 persons would get new life.”
Advertisement: To Purchase Plots/Land in and around chennai, Click here