Gaza doctors save baby from her dead mother’s womb
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் தரைமட்டமான கட்டிடத்தில் சிக்கி பலியான 8 மாத கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது. இதனால் அந்த குழந்தை பிறக்கும் முன்பே தாயை இழந்த பரிதாபம் நடந்துள்ளது. காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய காஸாவில் உள்ள தேர் அல் பலாலா நகரில் இஸ்ரேல் ராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு வீடு தரை மட்டமானதில் அதில் வசித்து வந்த ஷைமா அல் ஷேக் கனான்(23) என்ற 8 மாத கர்ப்பிணி இடிபாடுகளில் சிக்கி பலியானார். அவரது உடல் தேர் அல் பலாலாவில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரது வயிற்றில் உள்ள குழந்தை உயிருடன் இருப்பதை பார்த்து வியந்தனர். உடனே அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். பிறந்த பெண் குழந்தைக்கு ஷைமா அல் ஷேக் கனான் என்று அதன் தாயின் பெயரே வைக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் குழந்தை பிறக்கும் முன்பே தாயை இழந்தது பலரையும் கவலை அடையச் செய்துள்ளது. இது குறித்து இறந்த ஷைமாவின் தாய் மிர்ஃபாத் கனான் கூறுகையில், என் மகள் இறந்த துயரம் இருப்பினும் நான் பாட்டியான மகிழ்ச்சியும் உள்ளது. இந்த குழந்தையை கடவுள் தான் எனக்காக பாதுகாத்து கொடுத்துள்ளார். என் மகள் ஷைமா இறந்துவிட்டாள். ஆனால் தற்போது எனக்கு புதிய மகள் கிடைத்துள்ளாள். இந்த குழந்தையும் அதன் தாயை போன்றே என்னை அம்மா என்று அழைக்கும் என்றார்.
Gaza doctors save baby from her dead mother’s womb
Doctors have hailed a “miracle” baby girl who was delivered from the womb of a Palestinian woman killed in an Israeli airstrike. The premature baby girl was delivered by emergency Caesarean section after her mother was killed in the airstrike, it was reported. Dr Fadi Al-Khrote has described the baby girl’s survival as a miracle. Shayma Shiekh al-Eid, named after her mother by her family, remained in an incubator at a hospital in Khan Younis, in the southern Gaza Strip, over the weekend. Khrote told Al Jazeera that he believed “what’s happened is a miracle”. According to the BBC, the little girl has a 50/50 chance of survival. A four-year-old child was one of two people killed by Israeli tank fire in Gaza on Monday, medics said, hiking the Palestinian death toll from Israel’s 21-day operation to 1 037. According to emergency services spokesman Ashraf al-Qudra, four-year-old Samih Ijneid was killed when a shell hit a house to the east of Jabaliya where clashes had recently erupted between Israeli troops and Hamas militants. The shelling also killed a second person in the same area, he said. The deadly shelling came as both sides observed an unofficial lull in the fighting as Muslims began marking the first day of the Eid-al-Fitr holiday. Earlier on Monday, another three people succumbed to their injuries, raising the day’s toll to five, Qudra said. More than 6 200 Palestinians have been injured in the violence which began with an intensive air campaign on July 8 and expanded when Israel sent ground troops into the Gaza periphery on July 17. Figures released on Sunday by the UN Office for the Co-ordination of Humanitarian Affairs give a figure of 999 dead, including at least 760 civilians, among them 226 children. Of the 6 233 injured, 1 949 were children, it said. The agency also said 215 000 Palestinians had been internally displaced by the fighting, with the UN agency for refugees saying 170 461 of them had taken refuge in 82 of its shelters. The rest were staying with relatives or friends. The conflict has also cost the lives of 43 Israeli soldiers, all of whom were killed since the ground operation began, as well as two civilians and a Thai agricultural worker who were killed by rocket fire. Since Israel began Operation Protective Edge on July 8, the army said it had attacked 3 870 targets in Gaza, and militants had fired approximately 2 000 rockets which hit Israel, with around 500 shot down by its missile defence system, Iron Dome. On Tuesday, only one rocket struck Israel, hitting the southern city of Ashkelon without causing injury or damage, a military spokeswoman said.