BJP minister Pon.Radha Krishnan said today that NDA alliance in tamilnadu is very strong enough and this will successfully continue in 2016 Tamilnadu assembly election.
சென்னை : – தே.மு.தி.க. தலைவர் திரு.விஜயகாந்தின் பிறந்த நாளையோட்டி வாழ்த்து தெரிவிக்க, மத்திய இணை அமைசசர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள், பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் உள்ளிட்ட தலைவர்கள் சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் அவருடைய இல்லத்திற்கு சென்றார்கள்.
அதன் பின், வாழ்த்து தெரிவித்துவிட்டு வெளியில் வந்த, மத்திய இணை அமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திரமோடி சார்பாகவும், பா.ஜ.க. சார்பாகவும், தனிப்பட்ட என் சார்பாகவும் தே.மு.தி.கத்தின் தலைவர் திரு.விஜயகாந்தை நேரில் சந்தித்துவிட்டு பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்தேன் என கூறினார்.
அதை தொடர்ந்து, பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளும், அவரது பதில்களும்…
கேள்வி:- தமிழ்நாட்டில் பா ஜ க கூட்டணி எப்படி உள்ளது ?.
பதில்:- தமிழகத்தில் வலுவான கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணியாக இருக்கிறது.
கேள்வி:- இந்த கூட்டணி 2016-ம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை தேர்தலிலும் தொடருமா?.
பதில்: எங்களது கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது என கூறிவிட்டேன், ஆகவே, இந்தக் கேள்விக்கு இங்கு இடம் இல்லை.
இவ்வாறு மத்திய இணையமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
English Summary : BJP minister Pon.Radha Krishnan says that NDA alliance in tamilnadu is very strong enough and this will successfully continue in 2016 Tamilnadu Assembly election.
NDA alliance in tamilnadu
Advertisements :