What is love? 6-year-old’s wise note on love is an eye-opener for all of us
6 வயது சிறுமி ஒருவர் காதல் என்ற வார்த்தைக்கு அளித்துள்ள வித்தியாசமான விளக்கம் இணையதள வாசகர்களால் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டு பிரபலமாகி வருகிறது. இலண்டனைச் சேர்ந்த எம்மா என்ற 6 வயது சிறுமி தனது காதல் என்பது குறித்து தெரிவித்துள்ள வரிகள் இணையத்தில் பிரபலமாகியுள்ளது. உண்மையில் இது அச்சிறுமி எழுதியதுதானா என்பதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை.
காகிதம் ஒன்றில் மழலையான எழுத்தில் காதலுக்கான விளக்கம் எழுதப்பட்டுள்ளது. அந்தப் பேப்பரின் தொடக்கத்தில் ‘காதல் என்றால் என்ன?’ என்று ஆங்கிலத்தில் கேள்வியும், அதன் கீழே எம்மா.கே, வயது 6 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர், “காதல் என்பது உங்கள் பற்களில் சில எப்போது காணாமல் போகிறதோ, அப்போதும் நீங்கள் சிரிப்பதற்கு பயப்படாமல் இருப்பது.
ஏனென்றால் உங்களில் சில காணாமல் போனாலும் உங்களை உங்களது அன்பர் காதலிப்பார் என உங்களுக்கு தெரியும் என்பதாலே நீங்கள் தயங்காமல் சிரிப்பீர்கள்“ என்று எழுதப்பட்டுள்ளது. வாக்கியத்தின் கடைசியில், காதலின் குறியீடான இதயம் வரையப் பட்டுள்ளது. இவை அனைத்துமே பென்சிலால் எழுதப்பட்டுள்ளது. இந்த பேப்பர் விளக்கமானது இணையத்தில் தற்போது, பலராலும் விரும்பி படிக்கப்பட்டு வருகிறது.
What is love? 6-year-old’s wise note on love is an eye-opener for all of us
A six-year-old’s note on love is the most philosophical thing on the Internet today. This will remind you of how much we complicate our lives. The child wrote: “Love is when you are missing some of your teeth but you’re not afraid to smile because you know your friends will still love you even though some of you is missing.”