மதுரை அருகே மணமான அன்றே மணமகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள மாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா (29) என்ற ஆட்டோ டிரைவர். நேற்று காலை இவருக்குத் திருமணம் நடைபெற்றது. திருமண கொண்டாட்டத்தால் ஜீவாவின் வீடு களை கட்டியிருந்தது. இந்நிலையில் இரவில் புதுமாப்பிள்ளை ஜீவாவைக் காணவில்லை என புதுப்பெண் அவரது வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஜீவாவை உறவினர்கள் வீடு முழுக்க தேடியுள்ளனர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் ஜீவா தூக்கில் தொங்குவதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்த ஒத்தக்கடை போலீசார் விரைந்து சென்று ஜீவாவிடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான அன்றே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது ஏன்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
In Madurai a person committed suicide after getting married.