Ebola cases to triple by November unless efforts raised
‘எபோலா வைரஸ் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தாவிட்டால், இன்னும் இரண்டு மாதங்களில், இந்நோய்க்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 20 ஆயிரமாக உயர்ந்து விடும்; நோயை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம்’ என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து, அந்த அமைப்பு தெரிவித்துஉள்ளதாவது:மேற்கு ஆப்ரிக்க நாடுகளான, கினியா, சியாரா லியோன், லைபீரியா, நைஜீரியா ஆகிய நாடுகளில், எபோலா நோய் தாக்குதல் உள்ளது. இது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நோய்க்கு, 2,800 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில், 5,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நோயை கட்டுப்படுத்த இன்னும் ஸ்திரமான நடவடிக்கைகள் இல்லாததால், வரும் இரண்டொரு மாதங்களில், இந்நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் எண்ணிக்கை, 20 ஆயிரத்தை தாண்டக் கூடும். நோய் தாக்கியவர்களில், 71 சதவீதம் பேர் பலியாகியுள்ளதால், இறப்பு அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு, உலக சுகாதார அமைப்பு தெரிவித்உள்ளது.எபோலா வைரஸ் நோய் தாக்குதலுக்கு ஆளான வர்களுக்கு, குறையாத காய்ச்சல், தலைவலி, வயிற்றுப் போக்கு, குமட்டல், உடலின் உள்உறுப்புகள் மற்றும் வெளி உறுப்புகளில் ரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள் இருக்கும்.
Ebola cases to triple by November unless efforts raised
The number of Ebola infections will triple to 20,000 by November, soaring by the thousands every week if efforts are not significantly stepped up to stop the outbreak, the WHO warned on Tuesday. “Without drastic improvements in control measures, the numbers of cases of and deaths from Ebola are expected to continue increasing from hundreds to thousands per week in the coming months,” the World Health Organisation said in a study. The current outbreak in West Africa has already claimed more than 2,800 lives and infected more than 5,800 people. But the WHO study forecasts that if no significant action is taken, “the cumulative number of confirmed and probable cases by November 2 … will be 5,925 in Guinea, 9,939 in Liberia and 5,063 in Sierra Leone“. The total for those three countries alone will therefore surpass 20,000 cases, said the study published in the New England Journal of Medicine. If only cases of deaths and recovery were taken into account, the fatality rate stands at about 71 per cent, the study showed. “We are seeing exponential growth and we need to act now,” said Christopher Dye, co-author of the study jointly carried out with the Imperial College in London. “If we don’t stop the epidemic very soon, this is going to turn from a disaster into a catastrophe,” he said.PTI What is Ebola? This disease is caused by ebolavirus. Symptoms are fever, sore throat, muscle pain and headaches. This virus causes sever bleeding, internally and externally.