The stomach-churning moment a huge LIVE fish is removed from a man’s intestine
பிரேசிலில் ஒருவரின் குடலில் உயிரோடு துடித்துக் கொண்டிருந்த 2 அடி நீளமுள்ள மீன் ஒன்று அறுவை சிகிச்சை மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளது. பிரேசிலின் லான்ரினா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் உடலை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவர்கள் ஸ்கேன் செய்தனர். அப்போது அவரது குடல் பகுதியில் நன்கு வளர்ச்சியடைந்த மீன் இருந்தது தெரியவந்தது. அந்த நபரின் உடலில் துளையிட்டு மீன் உள்ளே சென்றிருக்கலாம் எனக் கருதிய மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். அறுவை சிகிச்சையின்போது அந்த நபரின் உடலில் இருந்து நீளமான மீனை மருத்துவர் உயிரோடு அகற்றினார். அப்போது உடன் இருந்த மருத்துவர்கள் அதனை வீடியோ எடுத்ததுடன், கூச்சலிட்டு ஆரவாரம் செய்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பின் குணமடைந்த நபர், தனது அனுமதி இல்லாமல் தனக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை படமாக்கப்பட்டதாகவும், அந்த வீடியோ இணையத்தில் பதிவேற்றப்பட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து முறையான அனுமதி இல்லாமல் அறுவை சிகிச்சையை படமாக்கியது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The stomach-churning moment a huge LIVE fish is removed from a man’s intestine
A man was forced to undergo radical surgery to have a live fish removed from his intestine. Graphic footage shows the man from Londrina, Brazil, having an operation to remove a South American lungfish from his body. In the horrific clip, a surgeon pulls out the eel-like fish, known to grow up to a length of 125 cm (4.10 ft), which had apparently burrowed into the man’s body.
.