Student of Standard 12th Named Akash at a government school in Chennai Maduravoyal has allegedly slapped a Computer teacher
கண்டித்த கணினி ஆசிரியைக்கு கன்னத்தில் பளார் விட்டு சவ்வை கிழித்து சென்னை மதுரவாயல் அரசு பள்ளி மாணவன் அராஜகம்…. மாணவனை பள்ளியை விட்டு நீக்க பள்ளி நிர்வாகம் முடிவு..
சென்னை கோயம்பேடு பகுதியை அடுத்து இருக்கும் மதுரவாயலில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இருக்கிறது. இங்கு சுமார் 500 க்கும் கூடுதலான மாணவ-மாணவிகள் பயில்கின்றனர். கணினி ஆசிரியராக புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சார்ந்த திருமதி.லட்சுமி (வயது 36) பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் நேற்று மாலை கணினி பாடம் நடத்திக் கொண்டிருந்த போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஆகாஷ் கணினியை திடீரென புகுந்து அணைத்து விட்டான். இதனால் மாணவன் ஆகாஷை கணினி ஆசிரியர் லட்சுமி கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆகாஷ் திடீரென ஆசிரியை லக்ஷ்மியை தக்க துவங்கி அவரது கன்னத்தில் பளார் என அறைந்தான். இதை கண்ட ஏனைய மாணவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். கணினி ஆசிரியை லட்சுமி நிலை குலைந்த நிலையில் ஆசிரியை லக்ஷ்மி தாக்கப்பட்ட தகவல் அந்த பள்ளி முழுவதும் பரவியது. இந்நிலையில் இன்று ஆசிரியை லட்சுமி பள்ளிக்கு வந்த நிலையில் அவர் காது வலிப்பதாக கூறி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருடைய காது சவ்வு கிழிந்த நிலையில் இருப்பதாகவும் இதனால் அவருக்கு காதில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்கள். இதனையடுத்து மதுரவாயல் ஆசிரியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கணினி ஆசிரியை திருமதி.லட்சுமி மதுரவாயல் காவல் நிலையத்தில் மாணவன் ஆகாஷுக்கு எதிராக புகார் ஒன்றை அளித்தார். மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த் பாபு விசாரணை மேற்கொண்டார்.
இதற்கிடையில் இச்சம்பவம் பற்றி கேள்விப்பட்ட மாவட்ட கல்வி துறை அதிகாரி திரு.சுவாமிநாதன் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு மாணவன் ஆகாஷ் ஒரு ஆசிரியையை தாக்கினார். இதற்காக இடை நீக்கம் செய்யப்பட்டு அப்போது ஆளுங்கட்சி கவுன்சிலர் ஒருவர் தலையீட்டினால் மாணவன் மன்னிப்பு கடிதம் வழங்கியதால் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது மீண்டும் அவன் ஆசிரியையை தாக்கியதால் அவனை பள்ளியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது.
[divide]
English Summary :
Student of Standard 12th Named Akash at a government school in Chennai Maduravoyal has allegedly slapped a Computer teacher after she admonished him for Mischief and rude behavior. The 34-year-old teacher Ms Lakshmi had pulled him up for turning off the power switch that supplied power to the school computers. “She advised him to behave,” after which he gave her “a hard slap”, an official of school said. ” Student Akash had behaved badly earlier before 6 months too and he was allowed to continue only after he tendered an apology,” the official said. The school officials has not filed a formal police complaint in view of the boy Akash’s future. “We were told by school authorities that they don’t prefer a complaint with us,” an officer of the local police said. The incident, however, has been reported to district education authorities. “Senior officials have held inquiries and appropriate disciplinary action is likely against the student,” the school official said. The teacher was sent to a government hospital where she is being examined for “possibility of internal injuries, as the blow had landed near her left ear,” said the police officer.
Student of Standard 12th Named Akash at a government school in Chennai Maduravoyal has allegedly slapped a Computer teacher
[divide]
- Law office in Chennai : For legal problems and issues contact Lawyers providing best remedy by Chennai Advocates : http://www.lawyerchennai.com/
- Best Apartment promoters and Builders at Chennai : http://www.bestsquarefeet.com/builders/
- Quality Tailoring classes in Chennai : http://www.chennaifashioninstitute.com/
- Best Quality Pad Printing Inks suppliers in India… – http://padprintinginks.in/
- Organic food products suppliers and exporters from India : – http://www.allorganics.in/
- Flats sale in Chennai Mogappair – By Bestsquarefeet…