need awareness girls death poor nutrition
இன்றைய இளைய தலைமுறை பெண்கள் தங்களின் அழகிற்காகவும் அலட்சிய போக்கினாலும் நாள் ஒன்றுக்கு 3ல் இருந்து 5பெண்கள் தமிழகத்தில் இறக்கின்றனர் என்பது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரியா வயது 27 சனி 18.05.13 அன்று போரூரை சேர்ந்த பிரபல மருத்துவமனையில் வயிற்று கோளாறு காரணமாக அவசர மற்றும் தீவிர சிகிச்சிசை பிரிவில் சேர்க்கப்பட்டார் 24மணி நேரமும் மர்த்துவர் கண்காணிப்பில் இருந்த பிரியா 19.5.13 அன்று மதியம் சுமார் 4மணிக்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் கதறி அழுத அவள் அன்னை தந்தை மற்றும் உறவினர்களை சமாதானப் படுத்த முடியாமல் மருத்துவமனை ஊழியர்கள் சிறுது நேரம் திணறினர்.
செய்தி அறிய நேரடியாக நமது தமிழசிறகுகள் செய்திதொடர்பாளர் மருத்துவமனையை அணுகினர் ஆனால் அவர்கள் அதை பற்றி வாய்திறக்க மறுத்துவிட்டனர். தினம் பல நோயாளிகள் இறக்கின்றனர் அனைவரும் எப்படி இறந்தனர் என்று நாங்கள் கூறினால் நாங்கள் மருத்துவ வேலையை விட்டுவிட்டு உங்களுடன் வந்துவிட வேண்டியதுதான் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
பிறகு நேரடியாக பிரியாவின் தந்தை செல்வம் அவரை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது முடிந்ததை பற்றி பேசவேண்டாம் என ஒதுங்கினார் இருப்பினும் வாயை மூடமுடியாமல் மனம் திறந்தார் செல்வம். என் பொண்ணுக்கு நடந்தா மாதிரி வேற எந்த பொன்னுக்கும் நடக்க வேண்டாம் அதுக்காகத்தான் சொல்றேன் என கண்களில் கண்ணீர்மல்க வாய்திறக்க ஆரம்பித்தார்
ஒழுங்கான மற்றும் சரியான உணவு இல்லாமல் என் பொண்ணு உயிர் இழந்தால் என்று கூறினார், பாசம் என்பதை பிள்ளைகளிடம் உணவில் காட்டவேண்டாம் . போதும் என்றால் விட்டு விடுவது, வேண்டாம் என்றால் விட்டுவிடுவது அவர்கள் வேலை பளுவினால் உணவு சாப்பிடாமல் இருப்பது கோவத்தில் உணவு சாப்பிடாமல் இருப்பது , நேரம் தவறி சாப்பிடுவது சத்தான உணவினை சாப்பிடாமல் பிட்சா பாஸ்ட் பூட் மற்று தரமில்லாத உணவினை சாப்பிடுவதினால் என் பெண்ணை போன்று பல பெண்கள் உயிர் இழக்கின்றனர் என மன வேதனையோடு கூறினார்
பின்பு தீவிரசிகிச்சை பிரிவில் இருந்து வெளிவந்த மருத்துவரை அணுகினோம் முதலில் கூறமறுத்த மருத்துவர் சமூக நன்மைக்காக தன் உணர்வுகளை பகிர்ந்து கொண்டார் அவர் கூறுகையில் சனி இரவு வயிற்று வலி என்றுதான் பிரியாவை இங்கு அழைத்து வந்தனர் நாங்கள் சிகிச்சை ஆரம்பிக்கும் பொழுதே அவர் தன் சுய நினைவை இழந்து இருந்தார் பின்பு தீவிரமாக சிகிச்சை அளித்து அவரின் சுவாசத்தை கட்டுக்குள் கொண்டு வந்தோம் குடலில் ஒரு சிறிய ஓட்டை விழுந்து இருந்தது இதனால் அதன் வழியாக மலக் கழிவுகள் உடல் முழுவது கலந்துள்ளது பிறகு அதை போராடி சரி செய்த பிறகு உடல் முழுவது சீழ் கட்டிகொண்டது அதையும் சரி செய்து அவருக்கு செயற்கை சுவாசத்தை கொடுத்து சிறிது சுய நினைவுக்கு கொண்டு வந்தோம். நான்கு வருடத்திற்கு முன்னாள் அவர் ஹார்பிக் குடித்துள்ளார் அதை அவர்கள் சரிசெய்து உள்ளனர் இருப்பினும் அது உடலில் இருந்து கொண்டே இருந்து உள்ளது அது குடலை ஓட்டை போட்டுள்ளது இதனால் அவர் நினைவை இழந்து இங்கு வந்தார் மேலும் அவர் உடலில் சத்தான உணவு இல்லாததால் சிகிச்சை ஏற்கும் சக்தி அவரின் உடலில் இல்லை.
பிரியா நான்கு வருடம் முன்பே வயிற்றில் ஒரு அறுவை சிகிச்சை செய்துள்ளார் அல்சர் மற்று அப்பண்டைடிஸ் சம்மந்தமாய் இருக்கலாம் என மருத்துவர் மழுப்பினார் இன்று அதிகமான இளம் பெண்கள் அப்பண்டைடிஸ் அறுவை சிகிச்சையை செய்துகொள்கின்றனர் இது சாதாரமான ஒன்றாய் உள்ளது அதன் பின்விளைவு தெரியாமல் அவர்களும் அதை செய்து கொள்கின்றனர் ஆனால் இப்டி செய்கின்ற அறுவை சிகிச்சை ஒழுங்காய் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் மீண்டும் மிகப்பெரிய விளைவுகளை ஏற்ப்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வது இல்லை, பின் குழந்தை பிறப்பின் பொழுதோ கூட இது மிகப் பெரிய விளைவை ஏற்ப்படுத்தலாம். ஆனால் மீண்டும் வரும் பிரச்சனைக்கு முன்பு செய்த அறுவை சிகிச்சயும் காரணமாக இருக்கலாம் என்பதை அவர்கள் நினைப்பதில்லை அந்த நேரம் என்ன பிரச்சனையோ அதை மட்டு வைத்து சிகிச்சை அளிக்கும் பொழுது மரணம் கூட ஏற்படும் பிரியாவின் மரணம் இதை ஒட்டியே நிகழ்ந்தது .
சரியான மற்றும் சத்தான உணவை நேரம் தவறாமல் உட்கொண்டாலே இதை நாம் சரி செய்து விட முடியும் இன்று பல பெண்களுக்கு சுகப்பிரசவம் நடக்காமல் போவதற்கு காரணம் திருமணத்திற்கு முன்பு பெண்கள் சரியான உணவு எடுத்துக்கொள்ளததே என்று கூட சொல்லலாம் இது ஆண்களுக்கும் பொருந்தும்.
ஆனால் பிரியாவின் வாழ்க்கையில் நடந்தது சற்று மாற்றம் அவர் அறுவை சிகிச்சைக்கு பிறகு உணவு சரியாக மேற்கொள்ளாமல் இருந்து இருக்கின்றார் அதை அவர் பெற்றோரும் கவனிக்கவில்லை பிறகு அவர்கள் குடும்பத்தில் நடந்த பிரச்சனை காரணமாக அவர் ஹார்பிக்கை எடுத்து குடித்துள்ளார்.இப்படி ஹார்பிக், நெய்ல் பாலிஷ் , பினாயில் , ஆசிட் , தின்னர் , நெய்ல் பாலிஷ் ரீமூவர் , இவைகளை குடித்தால் குடலை பெரும் அளவு பாதிக்கும் என்பதை தெரியாமல் அவசரத்தில் குடிக்கின்றனர் இவைகளை அந்த நேரம் நாம் மருத்துவமனை உதவியிடு சரி செய்து விட்டாலும் அது உடலில் இருந்து கொண்டே கொஞ்சம் கொஞ்சமாய் நமது உயிரை எடுத்துவிடும்
ஹார்ப்பிக் மிகவும் மோசமான ஒரு வகையான ஆசிட் இதனை குடித்த எவரும் உயிர் பிழைப்பது மிகவும் கடினம் 100ல் ஒருவர் மட்டுமே உயிருடன் இருப்பார் சிலர் 4முதல் 5 வருடம் வரை சிகிச்சைக்கு பின் உயிர் வாழலாம். பிரியாவும் இப்படி ஒரு நிலையில் தான் இங்குவந்து சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
அவர் உயிர் இழந்ததற்கு ஹார்பிக் மட்டும் காரணம் என்று கூறிவிட முடியாது ஏன் என்றால் ஹர்ப்பிக் குடித்த பின்பு அவரை சரிசெய்து இருக்கின்றனர் ஆனால் அவர் அதற்க்கு முன் சரியான உணவு உட்க்கொல்லாமல் செய்து கொண்ட அறுவை சிகிச்சையும் அதன் பின்னாலும் அவர் சரியான சத்துணவு உட்க்கொல்லாததால் கடைசி நேரத்தில் நாங்கள் செய்த சிகிச்சை பயனளிக்கவில்லை.
தங்கள் அழகிர்க்காகவும் அலட்ச்சிய போக்கினாலும் பொறுமை இழந்து பெண்கள் செய்கின்ற விஷயங்கள் அவர்கள் உயிரையே எடுத்துவிடும் என்பதை அவர்கள் உணர்வது இல்லை இது பெண்களுக்கு மட்டும் இல்லை ஆண்களுக்கும் இது பொருந்தும் இயற்கையிலேயே பெண்கள் உடல் சிறிது பலவீனம் என்பதினால் அவர்கள் உணவு பழக்கத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் பொறுமையை கையாள வேண்டும் என்று அவர் கூறினார்
பின்பு 5மணி அளவில் மருத்துவமையில் இருந்து பிரியாவின் உடல் மடிப்பாக்கம் கொண்டு செல்லப் பட்டு 7மணி அளவில் மின்சார சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது 27 வயதில் உணவுசரியாக மேற்கொள்ளாமலும் பொறுமை இழந்து அவர் செய்த காரியத்தாலும் இன்று செல்வத்தின் வம்சம் அழிந்து விட்டது காரணம் பிரியா செல்வத்திற்கு ஒரே மகள்