சென்னை 26 பிப்ரவரி 2019: சென்னை உயர் நீதிமன்றத்தில் பழங்குடி இனத்தை சார்ந்த குணநிதி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 2008ம் ஆண்டில் சட்டப் படிப்பு முடித்து 2010ல் வக்கீல்களுக்கான தேசிய தகுதி தேர்விலும் தேர்ச்சி அடைந்தேன். தற்சமயம் திருச்சி சட்டக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். கடந்த 2014ல் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 50 விரிவுரையாளர்களுக்கன பணியிடங்கள் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. பழங்குடியினர் பிரிவுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடும் அறிவிக்கப்படிருந்தது. அதன் பின்னர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 186 உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பு ஆணையும் வெளியிடப்பட்டது. கடந்த மூன்று முறையும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
ஆகவே, பழங்குடியினருக்கான 1% இட ஒதுக்கீடு வழக்கப்படும் என்ற அறிவிப்பாணையின்படி சட்டப் பல்கலைகழக விரிவுரையாளர் பணி எனக்கு வழங்குமாறு உத்தரவிட பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கு மார்ச் 4ம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது, அதுவரையில் சட்டப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவு பிறப்பித்தார்.
News Headline: Appointment of assistant professor post of Dr Ambedkar law college stayed by Madras high Court