எத்தியோப்பியவில் விமான விபத்து 4 இந்தியர்கள் உள்பட 157 பயணிகள் பலி

Ethiopian Aircraft Crash: 157 Passengers Including 4 Indians and Crews dead

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த 157 பேரும் பலியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எத்தியோப்பிய பிரதமர் தமது ட்விட்டர் பக்கத்தில் இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

காணாமால்போனதாக கூறப்பட்ட எத்தியோப்பிய விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 157 பயணிகளும் பலியாகியுள்ளதாக தெரியவந்திருக்கிறது.

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்தில் இருந்து போயிங் 737 ரக விமானம் கென்யாவின் நைரோபி நகருக்கு காலை 8.30 மணிக்குப் புறப்பட்டது. அடுத்த ஆறு நிமிடங்களில் இந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது.

இவ்விமானம் பிஷாப்டூ என்ற நகரத்தின் மேல் பறந்து சென்றுகொண்டிருந்தபோது விபத்துக்கு உள்ளானது என்றும் விமானத்தைத் தேடும் பணியை மேற்கொண்டுள்ளதாகவும் விமான நிறுவனத்தின் அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள்.

இந்த நிலையில் விபத்துக்கு உள்ளான விமானத்தில் பயணித்த 157 பேரும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எத்தியோப்பிய பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இவ்விமானத்தில் 33 நாடுகளைச் சார்ந்த பயணிகள் பயணம் செய்துள்ளார்கள். இவர்களில் இந்தியாவைச் சார்ந்த நான்கு பேரும் பலியாகியுள்ளார் என்று எத்தியோப்பியாவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இது சம்பந்தமாக தமது ட்விட்டரில் பதிவிட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், “வைத்யா ஹன்சின் அனகேஷ், வைத்யா பனகேஷ் பாஸ்கர், ஷிகா கார்க், மற்றும் நுகவராப்பு மனிஷா ஆகிய இந்தியர்கள் எத்தியோப்பிய விமான விபத்தில் பலியாகியுள்ளதாக அந்த நாட்டு தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

News Headline:

Ethiopian Aircraft Crash: 157 Passengers Including 4 Indians and Crews dead

Related posts