நெல்லை: வெளிநாட்டில் அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கித்தருவதாக கூறி மேலப்பாளையத்தை சேர்ந்த ஒரு தனியார் ஏஜென்ஸி நிறுவனம் நூதன மோசடியில் ஈடுபட்டது. அந்த நிறுவனம் முன்பணமாக பல லட்சம் வசூலித்துள்ளது.இந்த நிறுவனத்தை நம்பி ஏராளமான இளைஞர்கள் அணுகியுள்ளார்கள். ஆனால் அந்த நிறுவனம் பலரை ஏமாற்றி ரூ.1 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இந்த நிறுவனத்தால் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் யாரையும் வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை.இதனால் பாதிக்கப்பட்ட 36 பேரும் நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.இது சமந்தமாக போலீசார் விசாரணை நடத்தினர் .புகாரின் அடிப்படையில் போலீசார் மேலப்பாளையத்தை சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரை கைது, மேலும் இந்த வழக்கு சமந்தமாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.