மருந்தாளுநர் பணியிடங்களுக்கானத் தேர்வில் பி.பார்மில் பட்டயப் படிப்பு படித்தவர்கள் மட்டுமின்றி பட்டதாரிகளும் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நவீன் குமார் தாக்கல் செய்த மனுவில், நான் பி.பார்ம் படிப்பில் இளம்நிலை பட்டம் பெற்றுள்ளேன். மார்ச் 1-ஆம் தேதி மருத்துவப் பணிகள் இயக்குநர், தமிழகத்தில் அரசு மருந்தாளுநர்கள் பணிக்கானத் தேர்வு தொடர்பான அறிவிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்தத் தேர்வுக்கு பி.பார்மில் பட்டயப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கல்வித் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் பட்டயப் படிப்பு படித்தவர்கள் மட்டுமின்றி பட்டதாரிகளும் விண்ணப்பிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பி.பார்ம் பட்டதாரிகளுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகம். மேலும் இந்தப் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகள் மார்ச் 21-ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு மருந்தாளுநர் பணியிடங்களுக்கான தேர்வில் பட்டதாரிகளையும் அனுமதிக்க உத்தரவிட்டனர். மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நீட்டிக்க மருத்துவப் பணிகள் தேர்வு வாரிய இயக்குநருக்கு உத்தரவிட்டனர். இந்த உத்தரவு வழக்கின் இறுதி தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என தெரிவித்த நீதிபதிகள்,விசாரணையை வரும் ஏப்ரல் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
News in English
Allow graduates to apply for pharmacist posts: Madras High Court
CHENNAI: The Madras High Court has directed the Director of Medical Education (DME) to reopen his portal and include in it the degree qualification to enable the degree holders to apply for the post of pharmacists. A division bench gave the direction while passing interim orders on a PIL petition from one Naveenkumar, a degree holder in B Pharm, praying for a direction to declare the clause related to educational qualification for the post of pharmacist as illegal and null and void.
It is not disputed by the Additional Government Pleader that the post of pharmacist is a paramedical one. Thus, it could be seen that for recruiting paramedical and technical staff, degree holders and diploma holders are also eligible to apply. But in clause 7 of the notification, which dealt with procedure of selection, it was stated that diploma in pharmacy is the only minimum educational qualification required for the post. From the above it could be deduced that though the rules of procedure for medical recruitment are applicable to subordinate services too, eligibility is now restricted only to diploma holders. A prima facie case is made out by the petitioner, the bench said and passed the interim order.
The bench also directed the Director of Medical Recruitment Board to extend the deadline for applications to April 4, to enable degree holders to apply for the post. The bench, however, said that this arrangement is subject to the outcome of the writ petition.