சென்னை:திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அதில் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தனக்கு 24 மணி நேரமும் காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.அந்த மனு நீதிபதி சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்று திருமாவளவன் தரப்பில் கூறப்பட்டது.இதனையடுத்து, திருமாவளவனுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து காவல்துறை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு தமிழக டி.ஜி.பி.க்கு நீதிபதி உத்திரவிட்டார் .பிறகு அந்த வழக்கு விசாரணையை வருகிற 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
திருமாவளவனுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
