இணையதள பயன்பாட்டாளர்களின் இடையே பணப் பரிவர்த்தனையில் மிகவும் பிரபலமாக இருக்கக் கூடிய செயலி கூகுள் டிஜிட்டல் நிறுவனத்தின் கூகுள் பே ஆப். வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை, ஏடிஎம் தேடி அலைய தேவையில்லை, வரிசை இல்லை, ஆப் – இல் அனுப்பிய பணம் நேரடியாக வாங்கிக் கணக்கை வந்து சேரும் வசதி எனப் பல்வேறு வசதிகளைக் கொண்டு, மக்களின் மனதைக் கொள்ளை கொண்டு விட்டது கூகுள் பே செயலி.
எனினும் இந்த கூகுள் பே செயலிக்கு ஆர்பிஐ அனுமதி பெறவில்லை, இந்திய அரசின் வணிக சட்டங்களுக்குள் இது அடங்கவில்லை, ஆப் -இல் பயனீட்டாளர்கள் பதியும் ஆதார், பான் உள்பட தனி நபர் விவரங்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. இந்நிறுவனத்துக்கு நோடல் அமைப்பு கிடையாது. பணப் பரிவர்த்தனைகளைப் பற்றிய முறையான தரவு சேமிப்பில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன், வழக்கறிஞர் அபிஜித் மிஸ்ரா பொது நல வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜேந்திர மேனன் மற்றும் அனூப் பாம்பணி அடங்கிய டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு, இந்தியாவின் வங்கி செயல்பாடுகள் முறைப்படுத்தும் அமைப்பான ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல், அமெரிக்க நிறுவனமான கூகுள் இந்தியாவில் பணப் பரிவர்த்தனை சேவையை எப்படி செயல்படுத்த இயலும் என கேள்வி எழுப்பியுள்ளனர். இது பற்றி விவரங்களை உடனடியாக தாக்கல் செய்யச் ஆணையிட்டு இந்திய ரிசர்வ் வங்கிக்கும், கூகுகிள் இந்தியா நிறுவனத்துக்கும் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், ரிசர்வ் வங்கி மார்ச் 20 2019 -இல் வெளியிட்ட ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட “payment system operators List ” எனப்படும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளத் தகுதி பெற்றிருக்கும் அமைப்புகளின் பட்டியலில் கூகுள் பே செயலி இல்லாததை அடிப்படையாக வைத்து இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பதிலளித்திருக்கும் கூகுள் நிறுவனம், தன்னுடன் ஒப்பந்த அடிப்படையில் இணைந்திருக்கும் வங்கிகளுக்கு, தொழில்நுட்ப உதவி அளிக்கும் நிறுவனமாகத்தான் நாங்கள் செயல்படுகிறோம், நாங்கள் தனித்து பணப் பரிவர்த்தனையை செயல்படுத்துவதில், தொழில்நுட்ப உதவிக்கு நாங்கள் யாரிடமும் அனுமதி வாங்கத் தேவை இல்லை என கூறியிருக்கிறது.
இருப்பினும், பயனீட்டாளர்கள் தரவு பாதுகாப்பு பற்றிய கேள்விகளுக்கு இன்னும் பதில் அளிக்கவில்லை. தரவு திரட்டு உலக அளவில் மிகப்பெரும் வர்த்தகமாக மாறியிருக்கும் நிலையில், முறையான கண்காணிப்பு இன்றி ஒரு அமெரிக்கா நிறுவனம் இந்திய மக்களின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைக் கையாளுவது என்பது இந்திய பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும் என்பதை மறுக்க இயலாது.
ரிசர்வ் வங்கி, கூகுள் இரண்டும் முறையாக விளக்கத்தை அளித்து, நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் பதிலை சொல்லாவிட்டால், நீதிமன்றம் கூகுள் பே சேவையை முடக்க வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Plea alleges GPay has no approval; Delhi High Court seeks response from RBI, Google India
NEW DELHI: Hearing a Public Interest Litigation filed against the unauthorised operation of Google Pay (GPay), Google’s payment arm, the Delhi High Court on Wednesday sought a response from the Reserve Bank of India as well as Google India Digital Services Private Limited on the matter. The petitioner, financial economist Abhijit Mishra, alleged that GPay is not listed as an authorised operator in the Reserve Bank’s (RBI) catalogue of ‘Payment System Operators’ released on March 20, 2019; and hence, it’s functioning without requisite approval.
The court has issued notices to the RBI and Google India seeking their stand on the plea. “How are they (GPay) operating without permission?” a bench headed by Delhi High Court Chief Justice Rajendra Menon asked RBI. It has posted the matter for further hearing on April 29.
Mishra said in his plea that he is “very much concerned for the welfare of Indian economic and banking system in view of the privacy of Indian citizens” and that through the PIL, he wants to highlight that Google India Digital Services Private Limited is doing business as GPay in “unauthorised operation in India… in defiance of the Section 4 Sub Section 1 of the Payment and Settlement Systems Act, 2007.”
The petitioner also added that Google India has managed unauthorised access to personal information, such as Aadhaar and PAN, of the public by acting as a Payment and Settlement System. The PIL has sought a direction to RBI to order Google to “immediately” stop GPay’s “unauthorised operation” in India.
Meanwhile, Google said in a statement that GPay complies with all applicable legal requirements. “Google Pay operates as a technology service provider to its partner banks, to allow for payments through the UPI infrastructure, and is not part of payment processing or settlement,” a company spokesperson said.
He added that there is no requirement for licensing of these services under the prevailing statutory and regulatory provisions.
“In order to support our partner banks, our efforts in complying with the government’s data localisation norms are underway, and given the scale and complexity, we are being mindful to prioritise data security and uninterrupted services to our users as we make this transition. The central bank is apprised of the progress and we remain committed to complying with the laws of the land,” the spokesperson said.
Google has tie-ups with HDFC Bank, ICICI Bank and Federal Bank for its payments operations in India.