டெல்லி: சத்தீஸ்கரை சேர்ந்த பெண் , மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில் 2013ம் ஆண்டு தன்னை மருத்துவர் ஒருவர் திருமணம் செய்வதாக கூறி பாலியல் உறவு வைத்து கொண்டதாக தெரிவித்துள்ளார். மருத்துவர் என்னிடம் பாலியல் உறவு வைத்த பிறகு திருமணம் செய்ய மறுத்து விட்டார் . அதுமட்டும் இல்லாமல் வேறு பெண்ணை அவர் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார் . அந்த பெண்ணிடமும் பாலியல் உறவு வைத்துள்ளார்.அதனால் அவர் என்னை திருமணம் செய்ய முடியாது என்று மறுத்து விட்டார். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மருத்துவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து எப்ஐஆர் போட உத்தரவிட்டது. மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது உயர்நீதிமன்றம் .இந்த தண்டனையை எதிர்த்து மருத்துவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் உறவு வைத்து கொள்வதும் பாலியல் பலாத்காரம் தான் என நீதிபதிகள் தெரிவித்தனர். பலாத்கார குற்றவாளி மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.