டெல்லி:சுசன் எம் குப்தா அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேட்டில் இடைதரகராக செயல்பட்டார்.அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. பிறகு அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.மேலும் அவரை நீதிமன்ற காவலில் வரும் 23-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சுசன் எம் குப்தாக்கு ஜாமீன் மறுப்பு:டெல்லி நீதிமன்றம்
