டெல்லி :சர்ச்சைக்குரிய வகையில் கமல்ஹாசன் பேசினார். அது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியது.கடந்த 12ம் தேதி அரவக்குறிச்சி தொகுதி பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் ,அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று தெரிவித்தார். இது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியது.இதனால் பாஜக தனது கண்டனத்தை தெரிவித்தது.
பாஜக-வின் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா கமல்ஹாசனின் தேர்தல் பரப்புரைக்கு தடை செய்ய கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.டெல்லி உயர்நீதிமன்றத்தின் வரம்பிற்குள் வராததால் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். செய்தியாளர்களை சந்தித்த பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தனது மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும், தனது புகார் மனுவை விசாரித்த தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்வேன் என்று தெரிவித்தார்.