டெல்லி:கடந்த 2010-ம் ஆண்டு அயோத்தி வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.அயோத்தி வழக்கை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட முன்னாள் நீதிபதி பகீர் முகமது இப்ராஹிம் கலிபுல்லா, ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டும் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என கூறி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் மனுதாக்கல் செய்யப்பட்டது.ஜூலை மாதம் இறுதி வரை பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் சமரசகுழுவிற்கு அனுமதி வழங்கியிருந்தது.இக்குழுவின் சமரச முயற்சிகள் தோல்வி அடைந்ததாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனால் இவ்வழக்கில் தினசரி விசாரணைகள் தொடங்கியது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் நவம்பரில் ஓய்வு பெற உள்ளதால், அதற்க்கு முன்னதாக தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் உச்சநீதிமன்ற விசாரணையை நேரலையாக ஒளிபரப்பு செய்ய வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு அயோத்தி வழக்கு விசாரணையை தொடங்கியது
