al qaeda chemical weapons factory in iraq
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அல்கொய்தா இயக்க தீவிரவாதிகள் ரகசியமாக நடத்தி வந்த விஷ வாயு தயாரிப்பு தொழிற்சாலையை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
சரின், கடுடு வாயு உள்ளிட்ட ரசாயன விஷவாயுக்கள் பாக்தாத்தில் இயங்கி வந்த 2 தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த தொழிற்சாலையில் பணி புரிந்த 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் ஈராக் பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் முஹம்மது அல் அஸ்கரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த தொழிற்சாலையில் கைப்பற்றப்பட்ட உபகரணங்களையும், கைது செய்யப்பட்டவர்களையும் நிருபர்களுக்கு காட்டிய அவர், இங்கு தயாரிக்கப்பட்ட விஷவாயுவை பயன்படுத்தி ஈராக், ஐரோப்பியா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளின் மீது விஷ வாயு தாக்குதலை நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும் கூறினார்.
ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் விமானங்களின் மூலம் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இந்த விஷ வாயுவை திறந்துவிட தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விஷ வாயுவை சுவாசித்தவர்கள் சுவாசப்பை மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு சில நிமிடங்களுக்குள் துடிதுடித்து இறந்துவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.