சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் வீட்டில் 40 பவுன் தங்க, வைர நகைகள் கொள்ளை
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மதுரவாயயிலில் அடையாளம்பட்டு, மில்லினியம் டவுன் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் குமார். இவர், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞராக உள்ளார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்செந்தூருக்கு சென்றுவிட்டார்.
நேற்று காலை வீட்டை சுத்தம் செய்யும் பணிபெண் வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி வீட்டின் உரிமையாளரான உயர்நீதிமன்ற வழக்கறிஞர் குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் இது குறித்து மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், கொள்ளை நடந்த வீட்டை சோதனை செய்தார்கள். அந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தார்கள்.
அதில் முகமூடி அணிந்து வந்த இரண்டு கொள்ளையர்கள், வழக்கறிஞர் வீட்டின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து உள்ளே நுழைந்தனர். பின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
மேலும் அவரது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடங்கிய டி.வி.ஆர் பெட்டியையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். இது பற்றி மதுரவாயல் காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
Chennai High Court lawyer house robbed, 40 sovereign gold and diamond jewelry burgled
Chennai: Police are searching for masked robbers who broke the lock of a Chennai High Court lawyer’s house and looted 40 sovereigns of gold and diamond jewelry. Kumar lives in the Millennium Town residential area at Adayalapattu in Maduravoyal. He is an Advocate in the Chennai High Court. He had locked the house a few days ago and moved to Thiruchendur with his family.
When the maid who cleaned the house came yesterday morning, she was shocked to find that the locks on the door of the house had been broken. The owner of the house High Court Advocate Kumar informed about this. He lodged a complaint at the Maduravoyal police station.
Police rushed to the scene and searched the house where the robbery took place. They also examined footage recorded on a surveillance camera in the area.
The two masked robbers climbed the compound wall of the lawyer’s house and entered. they then broke the lock of the house and went inside and looted 40 sovereigns of gold jewelry and diamond jewelry from the house.
The robbers also took away a DVR box containing footage recorded on a surveillance camera at his home. Maduravoyal police have registered a case and are searching for the masked robbers.