சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் பகுதியில் 19 வயது இளம்பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதற்கு பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதே போல் ரோஜா, மிஸ்டர் ரோமியோ, ஜென்டில்மேன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்த நடிகை மதுபாலா, “பாலியல் குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும், உறுப்பை அறுத்து ஊனமாக்க வேண்டும்” என்று காணொளி மூலம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும் இந்த காணொளியை தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பு செய்யுங்கள். அவனுக்கு அளிக்கப்படும் தண்டனையை காண்பவர்களின் மனதில் நடுக்கம் ஏற்பட வேண்டும் என்று மிக ஆவேசமாக பேசியுள்ளார். இதை நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ரீடுவீட் செய்தது குறிப்பிடத்தக்கது.
பொது இடத்தில் வைத்து பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் : பிரபல நடிகை ஆவேசம்
