சென்னை: கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வரவில்லை , இருப்பினும் மக்களின் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் வரும் 28ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின் போது கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
மேலும் என்ன தளர்வுகள் ?- 28 ஆம் தேதி முதலமைச்சர் ஆலோசனை
