05 நவம்பர் 2020, இராயபுரம்: வழக்கறிஞரின் வீட்டிற்குள் புகுந்து அவரது கார் மற்றும் இரு சக்கர வாகனத்தை அடித்து நொறுக்கிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை இராயபுரம், அர்த்தன் சாலையைச் சேர்ந்த விவேகானந்தன், 45; ஐகோர்ட் வழக்கறிஞர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். 10 பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் நேற்று நள்ளிரவில் அவரது வீட்டிற்குள் புகுந்து அவரது கார், இரு சக்கர வாகனம், ஜன்னல் கண்ணாடி, மின்சார விசிறி மற்றும் ‘டிவி’ மின்சார விளக்குகளை அடித்து நொறுக்கியது. இது குறித்து , கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.