மும்பை: பார்வையாளர்களின் முறைகேடு குற்றச்சாட்டுக்கு இந்தியா டுடே என்ற செய்தி சேனலை சொந்தமாகக் கொண்ட டிவி டுடே நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ. ஐந்து லட்சம் அபராதம் விதித்து ஒலிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (பார்க்) பிறப்பித்த உத்தரவை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நெட்வொர்க் நிறுவனத்திற்கு ஒரு புதிய விசாரணையை வழங்கத் தயாராக இருப்பதாக ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்த பின்னர் நீதிபதிகள் நிதின் ஜம்தார் மற்றும் மிலிந்த் ஜாதவ் ஆகியோரின் பிரிவு அமர்வு நவம்பர் 5 ம் தேதி ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலின் ஒழுக்காற்று கவுன்சில் ஜூலை 31, 2020 நிறைவேற்றிய உத்தரவை ரத்து செய்து ஒதுக்கி வைத்தது.
டிவி டுடே நெட்வொர்க்-க்கு அபராதம் விதிக்கும் ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலின் உத்தரவு ரத்து : மும்பை உயர் நீதிமன்றம்
