உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.ஒய் இக்பால் காலமானார்

Justice MY Iqbal

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எம்.ஒய் இக்பால் இன்று காலை
டெல்லியில் காலமானார். அவர் 24 டிசம்பர் 2012 முதல் 12 பிப்ரவரி 2016
வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தார் மற்றும் அதற்கு முன், அவர் சென்னை
உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.

அவர் பிப்ரவரி 13, 1951 ஆம் ஆண்டு பிறந்தார், பி.எஸ்சி. 1970 ஆம் ஆண்டு ராஞ்சி
பல்கலைக்கழகத்திலும், எல்.எல்.பி. 1974 ஆம் ஆண்டு பட்டம் பெற்று தங்கப்பதக்கம்
வென்றார். 1975 ஆம் ஆண்டில் வழக்கறிஞராக ராஞ்சியில் தனது வாழ்க்கையை
தொடங்கினார். சிவில் தரப்பில் பிரத்தியேகமாக பயிற்சி பெற்று 1990 ஆம்
ஆண்டில் பாட்னா உயர்நீதிமன்றத்தின் ராஞ்சி அமா்வில் அரசாங்க வாதியாக
நியமிக்கப்பட்டார். பின்னர், 1996 மே 9 அன்று பாட்னா உயர்நீதிமன்றத்தின்
நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்,அதன் பின்னர் 2000 நவம்பர் 14
அன்று ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியானார் மற்றும் நீதிபதி
இக்பால், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்திலிருந்து தலைமை நீதிபதியாக
உயர்த்தப்பட்ட முதல் நீதிபதி ஆவார்.

Related posts