டெல்லி:சிபிஎஸ்இ / ஐசிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை 2 நாட்களில்
ரத்து செய்வது குறித்த முடிவு எடுப்பதற்காக கடந்த ஆண்டைப் போல இந்த
ஆண்டும் சரியான காரணத்தை உச்சநீதிமன்றம் அரசிடம் கோரியுள்ளது.
சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய
கோரிய மனுவை (ஜூன் 3, 2021) வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ள உச்சநீதிமன்றம், அடுத்த
இரண்டு நாட்களில் அரசு இறுதி முடிவை எடுக்கும் என்று அட்டர்னி ஜெனரல்
தெரிவித்தார்.
முந்தைய ஆண்டின் கொள்கையிலிருந்து மத்திய அரசு வெளியேற முடிவு செய்தால்,
அதற்கு நல்ல காரணங்களை தெரிவிக்க வேண்டும் என்று அமர்வு குறிப்பிட்டது
ஏனெனில் கடந்த ஆண்டு நல்ல ஆலோசனையின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது.