jayalalitha letter to manmohan singh
சென்னை, ஜூன் 9: நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் பயிற்சி பெறுவதற்காக வந்துள்ள 2 இலங்கை ராணுவ அதிகாரிகளை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மக்களின் உணர்வுப்பூர்வ மான இந்த விஷயத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அவர் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இன்று அனுப்பியுள்ள நேரடி கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு:
தமிழக மக்களின் உணர்வுப்பூர்வமான, மிக முக்கியமான பிரச்சனை யில் உங்கள் கவனத்தை உடனடி யாக ஈர்க்க விரும்புகிறேன். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு செய்து வரும் கொடுமைகளுக்கு தமிழ்நாட்டு மக்களிடையே ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆனால் இந்திய அரசு இதனை பொருட்படுத்தாமல் இலங்கையின் 2 ராணுவ அதிகாரிகளை பயிற்சிக் காக அழைத்து இருக்கிறது.
விங்க் கமாண்டர் எம்.எஸ்.பண்டாரா திச தாசநாயகா மற்றும் மேஜர் சி.எஸ். ஹரிஷ்சந்திரா ஹெட்டியார்ச்சிக் என்ற இந்த இரு அதிகாரிகளும் ஏற்கனவே வெலிங்டனுக்கு வந்துவிட்ட தாகவும், அங்கு பயிற்சிக்கு முந்தைய திட்டங்களில் மே 27ந் தேதியே ஈடுபடுத்தப்பட்டு விட்டதாகவும் நான் அறிகிறேன். இந்த விஷயத்தில் 16.7.2012, 25.8.2012 மற்றும் 28.8.2012 ஆகிய நாட்களில் நான் எழுதிய கடிதங்களை தயவு செய்து நினைவு
கூறுமாறு நான்உங்களைகேட்டுக் கொள்கிறேன். இந்தக் கடிதங்களில் இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு தமிழக மக் களிடையே ஏற்பட்டுள்ள கடுமையான எதிர்ப்பை நான் உங்களுக்கு தெரிவித்து இருந்தேன்.
இலங்கையில் நடந்த இனப்படு கொலை மற்றும் தொடர்ந்து நடந்து வரும் மனித உரிமை மீறல்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதற்கு தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டி ருக்கிறது. மேலும் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர் களை இலங்கை கடற்படையினர் மீண்டும் மிருகத்தனமாக தாக்கி அப்பாவி மீனவர்களை கைது செய்வதை எதிர்த்து மீனவர் சமுதாயம் போராடி வருகிறது.
இந்த விஷயத்தில் எங்களது ஆட்சேபத்தையும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர் மானங்களையும் தங்களது கவனத் திற்கு கொண்டு வந்திருக்கிறேன். இவ்வளவு ஆட்சேபனைகளையும் தமிழக மக்களின் உணர்வுகளையும் பொருட்படுத்தாமல் இந்திய அரசு மேலும் 2 இலங்கை ராணுவ அதிகாரி களுக்கு நீலகிரி மாவட்டம் வெலிங் டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் ரகசிய பயிற்சி அளிக்க அனுமதியளித்துள்ளது. இதைவிட மேலும் வியப்பளிக்கும் விஷயம் என்னவென்றால் மே 27ந் தேதி இரு இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கும் பயிற்சிக்கு முந்தைய பணி தொடங்கப்பட்ட அதே நாளில் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தஞ்சையில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழக மக்களின் உணர்
வுகளை கருத்தில் கொண்டு இலங்கை ராணுவத்தின ருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பது இல்லை என்று முடிவு எடுத்திருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். ராணுவ அமைச்சருக்கு தமது அமைச்சகத்திலேயே எடுக்கப்பட்ட கொள்கை முடிவு தெரியாமல் இருப்பது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை தருகிறது.தமிழக மக்களின் உணர்வுப்பூர்வ மான விஷயத்தில் மத்திய அரசு இரட்டை மனப்பான்மையுடனும், ஏமாற்றும் விதத்திலும் நடந்துகொள் வது மிகவும் வருந்தத்தக்கது.
எனவே வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு பயிற்சிக்காக வந்துள்ள 2 இலங்கை ராணுவ அதிகாரிகளை உடனடியாக விடுவித்து அவர்களை திருப்பி அனுப்புவதற் கான உத்தரவை பிறப்பிக்குமாறு நான் உங்களை மிகவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். மேலும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் முற்றிலும் நிறுத்தப்படுவதற்கும் தமிழக மீனவர்கள் மீதான சட்ட விரோத தாக்குதலை கைவிடுவதற்கும் நம்பகமான திருப்திகரமான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்க வேண்டும்.
அதுவரை இலங்கை ராணுவத்துடன் ஒத்துழைப்பதோ, பயிற்சி திட்டங்களை மேற்கொள்வதோ கூடாது என்பதற்கான தெளிவான கொள்கை வழிகாட்டு தலை இந்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
Article Courtesy : Malaisudar.
jayalalitha letter to manmohan singh
Tamil Nadu Chief Minister J. Jayalalitha has accused the Indian government of concealing training it provided to members of Sri Lanka’s security forces in the state since May.
In a strongly worded letter to Prime Minister Manmohan Singh, Jayalalitha said Delhi was showing “excessive enthusiasm” for training Sri Lankan forces and that it“mischievously concealed” training officers in Tamil Nadu.
“I have expressed in no unclear terms the strong views of my government on imparting training to defence personnel belonging to Sri Lanka,
“It is very clear that this fact of ongoing training since May 2012 has been mischievously concealed from my government, showing scant regard for the views of my government as well as for the sentiments of the people of Tamil Nadu,” she said.
She criticised the decision to move Sri Lankan personnel to Bengaluru after she opposed their training in Tamil Nadu earlier this year.
“This action itself was not proper because instead of sending these personnel back to Sri Lanka, the Government of India exhibited excessive enthusiasm and concern for these personnel by relocating them to Yelahanka Air Force Station, Bengaluru, in order to enable them to complete their training”,
English Article Courtesy: Tamilgaurdian