இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் கொலை மற்றும் பலாத்கார வழக்குகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறுவர்களே அதிகம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டில் கொலை வழக்கில் 100 சிறுவர்களும், பலாத்கார வழக்கில் 60 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்றவியல் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
இது கடந்த 2011ம் ஆண்டைக் காட்டிலும் மிக அதிகம் என்றும், ஆனால், பீகார், மகாராஷ்டிர மாநிலங்களைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, 74 சிறுவர்கள் கொலை முயற்சி வழக்கிலும், 18 பேர் ஆட்கடத்தல் வழக்கிலும், 10 பேர் பலாத்கார முயற்சி வழக்கிலும், 13 பேர் கொள்ளையடித்த வழக்கிலும் கைதாகியுள்ளனர்.
பல்வேறு குற்றச் செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவது அதிகமாக உள்ள மாநிலங்களின் வரிசையில், ஆந்திரம், பீகார், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகியவை முன்னணியில் உள்ளன.
இந்தியாவில், சில சமூக மாற்றங்களைக் கொண்டு வர இதுவே சரியான நேரம் என்று இதன் மூலம் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது.
new delhi news