chennai adyar cancer institute
சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ரூ. 54 லட்சத்தை நன்கொடையாக செவ்வாய்க்கிழமை வழங்கியது.
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர். சேதுராமன், சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் வி. சாந்தாவிடம் ரூ. 54 லட்சத்துக்கான காசோலையை நேரில் சென்று வழங்கினார்.சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர். சேதுராமன், சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் வி. சாந்தாவிடம் ரூ. 54 லட்சத்துக்கான காசோலையை நேரில் சென்று வழங்கினார்.
இதுகுறித்து சேதுராமன் தெரிவித்தது: சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் உள்ள அதிநுண்-நுட்பவியல் மற்றும் உயிரியல் பொருள்சார் உயராய்வு சேர்ந்த மையமும், அடையாறு புற்றுநோய் சிகிச்சை கழகமும், புற்றுநோய் மற்றும் மூளைக்கட்டி பற்றி ஆய்வு நிகழ்த்துவதில் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளன.
இரு நிலையங்களும் கைகோர்த்து இது பற்றித் தொடர்நிலை ஆய்வு மேற்கொள்ள இது நல்ல தொடக்கம். புற்றுநோய் தொடர்பான பல அரிய செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், அது பற்றிய கல்வியறிவைப் பெறவும், தொண்டு செய்வதற்கும் இது வழிவகுக்கும் என்றார் சேதுராமன்.