ஆட்டோக்களில் மீட்டர் பொருத்துவது அவசியம்
வரும் ஜூலை 2ஆம் தேதி முதல் ஆட்டோக்களில் மீட்டர்களை பொருத்தி 2 கி.மீட்டருக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்குமாறு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வீட்டு வசதி துறை சார்ந்தோர், ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எஃப் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரதிநிதிகளுடன் கலந்துகொண்ட கூட்டம் நேற்று தலைமைசெயலகத்தில் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆட்டோக்களிலும் மீட்டர்களை பொருத்த வேண்டும் என்றும் கிலோ மீட்டர்களுக்கு ஏற்ப கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவை அமல்படுத்துவது குறித்து இதில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
மேலும் வரும் ஜூலை 2ஆம் தேதி முதல் ஆட்டோக்களில் மீட்டர்களை பொருத்தி 2 கி.மீட்டருக்கு ரூ.20 கட்டணமும் கூடுதல் கி.மீட்டர் ஒன்றுக்கு தலா ரூ.10 கட்டணமும் வசூலிக்க வேண்டும் என்றும் வசூலிக்குமாறு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வரும் ஜூலை மாதம் 6ஆம் தேதிக்குள் கட்டாயமாக அனைத்து ஆட்டோக்களிலும் மீட்டர்களை பொருத்தியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
Regulations for Auto Meter Charges