pakistani black money in swiss banks
சூரிச் : மக்கள் தொகையிலும், பரப்பளவிலும், தொழில்நுட்பத்திலும் மிக வேகமாக வளர்ந்துள்ள இந்தியாவை விட, பாகிஸ்தான் நாட்டவர்கள் சுவிஸ் வங்கியில் அதிகமான தொகையை கருப்புப் பணமாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்த வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்குகளில் உள்ள பணத்தை விட, பாகிஸ்தானியர்கள் மற்றும் அந்நாட்டு தொழில் நிறுவனங்கள் வைத்துள்ள கணக்கில்தான் அதிகமான கறுப்புப்பணம் பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. சுவிஸ் வங்கியில் பாகிஸ்தானியர்கள் வைத்துள்ள பணத்தின் அளவு ரூ.92000 கோடியாகும்.
சுவிஸ் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணத்தின் அளவு ரூ.9000 கோடியாக குறைந்துள்ளது. இது 2012ம் ஆண்டை விட 35 சதவீதம் அல்லது ரூ.4900 கோடி குறைவாகும். 2012ம் ஆண்டின் தொடக்கத்தில் ரூ.14,000 கோடி இந்தியர்களின் சேகரிப்பில் இருந்த பணம் மூடப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வங்கியின் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறித்த விபரங்களை கேட்டுள்ளதால் சுவிஸ் வங்கிக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. சுவிஸ் வங்கிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கூட ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிக் கணக்கை மூடி இருக்கலாம் என கூறப்படுகிறது.