india wins Cricket Mini world cup
மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் பொட்டில் இந்திய அபார ஆட்டத்தினால் இங்கிலாந்தை 5ரன் வித்தியாசத்தில் இறுதி போட்டியில் வென்று சாம்பியன் ஆனது. 2002-ல் இலங்கையுடன் மினி உலகக் கோப்பையைப் பகிர்ந்து கொண்ட இந்தியா, முதல்முறையாக தனித்து கோப்பையை வென்றுள்ளது.
பர்மிங்காம்மில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்துடன் மோதிய இந்தியா 5ரன் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கை பற்றியது, ரசிகர்களால் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று பிர்ப்பகல் 3.00 மணி அளவில் தொடங்குவதாக இருந்தது மழையின் காரணமாக நேரம் மற்றும் ஆட்ட நேரமும் குறைக்கப்பட்டது .டாஸ் வென்ற இங்கிலாந்து இந்தியாவை பட்டிங் செய்ய அழைத்தது. மழையின் காரணமாக ஆட்டம் துவங்குமா என்ற கேள்விக்குறி ஆனது. 5மணி நேரம் கழித்து ஆட்டம் துவங்கலாம் என்று எதிர்ப்பார்க்கப் பட்டது. ரசிகர்களும் ஆட்டம் துவங்குமா என்ற பதட்டத்தில் இருந்தனர். பல மணி நேரம் கழித்து மழை விட்ட பிறகு 25 ஓவர்கள் என ஆட்டம் துவங்க முடிவு செய்யப்பட்டது இருப்பினும் மழை விட்டு விட்டு பெய்தலால் நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்து 20 ஓவர்களாக குறைக்கப் பட்டது. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியுடன் மோதிய இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அசத்தியது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இப்போட்டி பர்மிங்காம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.இந்த நிலையில், கனமழை கொட்டியதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விட்டு விட்டு மழை பெய்ததால் 5 மணி நேர தாமதத்துக்குப் பிறகும் ஆட்டம் தொடங்குவது கேள்விக்குறியாகவே இருந்தது. எனினும், போட்டி எப்படியும் நடக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.ஒருவழியாக மழை ஓய்ந்த பிறகு மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள், தலா 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து, இந்திய நேரப்படி இரவு 8.50 மணிக்கு போட்டி தொடங்கியது. ரோகித் ஷர்மா, ஷிகார் தவான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரோகித் 9 ரன் எடுத்து ஸ்டூவர்ட் பிராடு வேகத்தில் கிளீன் போல்டானார்.இந்திய அணி 5.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன் எடுத்திருந்த நிலையில், மீண்டும் மழை கொட்டியதால் ஆட்டம் தடைபட்டது. சிறிது நேரத்துக்குப் பிறகு, ஆட்டம் மீண்டும் தொடர்ந்தது.அதிரடி வீரர் தவான் 31 ரன் எடுத்து (24 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கார்த்திக் 6 ரன் மட்டுமே எடுத்து டிரெட்வெல் சுழலில் மார்கன் வசம் பிடிபட்டார். போபாரா வீசிய 13வது ஓவரில் ரெய்னா (1), கேப்டன் டோனி (0) இருவரும் வெளியேற, இந்தியா 66 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது.
இந்த நிலையில் கோஹ்லி & ஜடேஜா ஜோடி 6வது விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்தது. கோஹ்லி 43 ரன் எடுத்து (34 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழந்தார். அஷ்வின் (1) ரன் அவுட் ஆனார். இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 129 ரன் எடுத்தது. ஜடேஜா 33 ரன் (25 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), புவனேஷ்வர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 124 ரன் எடுத்து தோற்றது. டிராட் 20, மார்கன் 33, போபாரா 30 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய பந்துவீச்சில் இஷாந்த், அஷ்வின், ஜடேஜா தலா 2, உமேஷ் ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.
கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.11.3 கோடியும், 2-வது இடம்பிடித்த இங்கிலாந்துக்கு ரூ.5.6 கோடியும், அரையிறுதியில் தோற்ற தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு தலா ரூ.56 லட்சமும் பரிசுத் தொகையாக கிடைத்தது. இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் சர்வதேச அளவில் 50 ஓவர் உலகக் கோப்பை, மினி உலகக் கோப்பை, இருபது ஓவர் உலகக் கோப்பை என 3 உலகக் கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை இந்திய கேப்டன் தோனி பெற்றார். அதேநேரத்தில் இதுவரை எந்த உலகக் கோப்பையிலும் வென்றதில்லை என்ற இங்கிலாந்தின் துரதிருஷ்டம் இன்னும் தொடர்கிறது.
2002-ல் இலங்கையில் நடைபெற்ற மினி உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா, இலங்கையை எதிர்கொண்டபோது மழை குறுக்கிட்டது. இறுதி ஆட்டத்தின் முதல் நாள் மழையால் பாதிக்கப்பட, 2-வது நாள் இறுதி ஆட்டம் நடத்தப்பட்டது. அப்போதும் மழை குறுக்கிடவே, கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால் அந்த இரு நாள்களிலும் இந்தியாவே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருந்தது.
அதேபோன்று இந்த முறையும் இறுதி ஆட்டத்தில் மழை விளையாடியது. எனினும் இந்த ஆட்டத்தை நடத்த கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கியது ஐசிசி தொழில்நுட்பக் குழு. இதனால் 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், இங்கிலாந்தை மட்டுமல்ல, மழையையும் வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்தியா. இந்த ஆட்டத்தில் 33 ரன்கள் எடுத்ததோடு, 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா, ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களுக்கு வழங்கப்படும் “கோல்டன் பால்’ விருதையும் ஜடேஜா (12 விக்கெட்டுகள்) தட்டிச் சென்றார். இந்தப் போட்டியில் 5 ஆட்டங்களில் 363 ரன்கள் குவித்த ஷிகர் தவன், அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான “கோல்டன் பேட்’ விருதைத் தட்டிச் சென்றார். இந்த சாம்பியன்ஸ் டிராபியில் 5 ஆட்டங்களில் விளையாடிய ஷிகர் தவன் 363 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒரு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன் குவித்த இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். முன்னதாக 2000-ல் நடைபெற்ற போட்டியில் கங்குலி 348 ரன்கள் எடுத்ததே, சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது.
இந்தியா-129/7
(கோலி 43, ஜடேஜா 33*, தவன் 31, போபாரா 3வி/20)
இங்கிலாந்து-124/8
(மோர்கன் 33, போபாரா 30, டிராட் 20, அஸ்வின் 2வி/15, ஜடேஜா 2வி/24)
ஆட்டநாயகன் விருது ஜடேஜாவிர்க்கும், தொடர் நாயகன் விருது ஷிகார் தவானும் பெற்றனர்.
india wins Cricket Mini world cup
pictures: thanks to yahoo