Tamil poet kannadasan birthday
இன்று உலக தமிழர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த வித்தக கவிஞன் கவியரசன் கண்ணதாசன் அவர்களின் 87வது பிறந்தநாள்
கண்ணதாசன் ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருதுபெற்றவர்.
தமிழ் வார்த்தைகளால் சொற்களை கவிதை நயத்தில் கையாண்டு கவிதையாய் கொடுத்து தமிழ் மக்கள் மனதில் இன்றும் கடவுளாய் உலா வருபவர் கவிஅரசன் கண்ணதாசன், எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி அவர்களுக்கு தனித் தனியே வரிகள் அமைத்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இருவரும் தமிழ் மக்களின் உள்ளத்தில் இடம் பிடிக்க கண்ணதாசனும் ஒரு கருவியாக இருந்தார். வீரம் சோகம் காதல் அன்பு மரணம் பயம் வெட்கம் பண்பு குடும்பம் சகோதரம் வெறுப்பு தோல்வி வெற்றி களிப்பு என பல்வேறு தலைப்புகளில் சினிமா பாடல்களை எழுதி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கண்ணதாசன் அவர்கள். இன்றும் புதுக்கவிதை எழுதும் கவிஞர்களின் கடவுளாக விளங்குபவர் கண்ணதாசன் அவர்கள் அவரின் எழுத்துக்கள் அனைத்தும் நாளைய தலைமுறைக்கு பாடமாக இருக்க வேண்டும் என்றே எழுதி உள்ளார். அவரின் எழுத்துக்களை போன்றே வாழ்ந்து காட்டியவர் கண்ணதாசன், இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல்ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின்பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.
“காவியத்தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெரும் தலைவன்
பாமரஜாதியில் தனி மனிதன்
நான் படைப்பதினால் என் பேர் “இறைவன்”
“மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்
அவர் மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்
நான் நிரந்தமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை”
வாழ்க்கை வரலாறு:
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதி புதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.
கண்ணதாசனின் முதல் மனைவி பெயர் பொன்னம்மா (இறப்பு:மே 31, 2012), கண்மணிசுப்பு உள்ளிட்ட 3 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம் உள்ளிட்ட 3 மகள்களும் உள்ளனர். இரண்டாம் திருமணம் பார்வதி என்பவரை செய்து கொண்டார். இவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன.
உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20 இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22 இல் தகனம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்[2] அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20 இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22 இல் எரியூட்டப்பட்டது.
படைப்புகள்
- • இயேசு காவியம்
- • அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)
- • திரைப்படப் பாடல்கள்
- • மாங்கனி
கவிதை நூல்கள்
- • கண்ணதாசன் கவிதைகள் – 6 பாகங்களில்
- • பாடிக்கொடுத்த மங்களங்கள்
- • கவிதாஞ்சலி
- • தாய்ப்பாவை
- • ஸ்ரீகிருஷ்ண கவசம்
- • அவளுக்கு ஒரு பாடல்
- • சுருதி சேராத ராகங்கள்
- • முற்றுப்பெறாத காவியங்கள்
- • பஜகோவிந்தம்
- • கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்
புதினங்கள்
- • அவள் ஒரு இந்துப் பெண்
- • சிவப்புக்கல் மூக்குத்தி
- • ரத்த புஷ்பங்கள்
- • சுவர்ணா சரஸ்வதி
- • நடந்த கதை
- • மிசா
- • சுருதி சேராத ராகங்கள்
- • முப்பது நாளும் பவுர்ணமி
- • அரங்கமும் அந்தரங்கமும்
- • ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
- • தெய்வத் திருமணங்கள்
- • ஆயிரங்கால் மண்டபம்
- • காதல் கொண்ட தென்னாடு
- • அதைவிட ரகசியம்
- • ஒரு கவிஞனின் கதை
- • சிங்காரி பார்த்த சென்னை
- • வேலங்காட்டியூர் விழா
- • விளக்கு மட்டுமா சிவப்பு
- • வனவாசம்
- • அத்வைத ரகசியம்
- • பிருந்தாவனம்
வாழ்க்கைச்சரிதம்
- • எனது வசந்த காலங்கள்
- • வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)
- • எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
- • மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)
கட்டுரைகள்
- • கடைசிப்பக்கம்
- • போய் வருகிறேன்
- • அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
- • நான் பார்த்த அரசியல்
- • எண்ணங்கள்
- • தாயகங்கள்
- • வாழ்க்கை என்னும் சோலையிலே
- • குடும்பசுகம்
- • ஞானாம்பிகா
- • ராகமாலிகா
- • இலக்கியத்தில் காதல்
- • தோட்டத்து மலர்கள்
- • இலக்கிய யுத்தங்கள்
- • போய் வருகிறேன்
- நாடகங்கள்
- • அனார்கலி
- • சிவகங்கைச்சீமை
- • ராஜ தண்டனை
இவை தவிர கவிஞர் கண்ணதாசன் பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளார், அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.
Tamil poet kannadasan birthday
picture: thanks to Google image
Tamil poet kannadasan birthday
today the legend poet kannadasan birthday