திமுக தலைவர் கருணாநிதியின் 90 ஆவது பிறந்த நாளையொட்டி ஆஸ்ட்ரியாவில் அவரது படத்துடன் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.
Fileதிமுக தலைவர் கருணாநிதி தனது 90ஆவது பிறந்தநாளை கடந்த மாதம் 3 ஆம் தேதி கொண்டாடினார். ஆஸ்ட்ரியாவில் நமக்குப் பிடித்தவர்களின் படத்துடன் தபால் தலை வெளியிட அனுமதி உண்டு. அந்தவகையில் ஆஸ்ட்ரிய தபால் துறைக்கு சிறப்புக் கட்டணம் செலுத்தி நமக்கு பிடித்தவர்களின் முகங்களை தபால் தலையாக வெளியிடலாம். இந்நிலையில் டான் மற்றும் அசோக் ஆகிய இருவரும் சேர்ந்து பொது வாழ்க்கை, சினிமா, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் கருணாநிதியின் நினைவாக தாபால் தலையை வடிவமைத்து அதை வெளியிட்டுள்ளனர். அந்த தபால் தலையில் கருணாநிதியின் முகம், கட்சிகொடி மற்றும் 90 என்ற எண் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளியிடப்பட்டுள்ள இந்த தபால் தலையின் விலை ரூ.7,023 ஆகும்.
தனிப்பட்ட முறையில் இந்த தபால் தலை வெளியிடப்பட்டாலும் இதை அங்குள்ள தபால்களில் பயன்படுத்த முடியும்.
English Summary:
CHENNAI: Austrian government has honoured DMK chief M Karunanidhi with a postage stamp for his 90th birthday, which was celebrated on June 3. The stamp on the DMK leader was based on requests from ‘individuals’ in Austria, who drew the attention of the Austrian postal service on the nonagenarian’s contributions in the field of public life, cinema and literature. The international postage stamp has the image of the DMK leader’s face with the band of party flag, red and black and numeral 90, denoting his age as a backdrop. Don Ashok, who has business interests in Austria, and who is one among the enthusiasts who made it possible, told that it was the result of affectionate gestures of a few towards the party chief. “It is a result of love and affection, lakhs of partymen have for Karunanidhi,” he said. The stamp, a limited version, comes at a cost of 90 euros. Source:- Times of India