actor ajith new film arambam movie scene Aarambam Video Leaked
அஜித் நடித்து வரும் ‘ஆரம்பம்’ படத்திலுள்ள ஒரு காட்சி நேற்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பில்லா படத்திற்கு பின்பு விஷ்ணுவர்தன் கூட்டணியில் அஜித் இணைந்துள்ள படம் என்பதினால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர். பின்பு சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ஸ்டில்ஸ் ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துத்துள்ளது.
இறுதியாக இப்படத்திற்கு சூட்டப்பட்ட தலைப்பிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் அஜித் சம்மந்தப்பட்ட ஒரு காட்சி நேற்று இணையத்தில் வெளியாகி படக்குழுவினரையும், அஜித் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து விஷ்ணுவர்தன் கூறுகையில், இந்த சம்பவம் எனக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஆனால், என்னுடைய படக்குழு சம்மந்தப்பட்டவர்கள் யாரும் இந்த காட்சியை வெளியிடவில்லை என்பது மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். மேலும் இது பற்றி விசாரணை நடந்து வருகிறது என்று தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
actor ajith new movie scene Aarambam Video Leaked
actor ajith new film arambam movie scene Aarambam Video Leaked
Advertisement: Chennai Real estate Company: http://www.bestsquarefeet.com/