சேரன் மகள் விவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து சந்துரு குடும்பம் தொடர்பாக திடுக்கிடும் ஆதாரங்களை காட்டியுள்ளார். சேரனின் நண்பரும் இயக்குனருமான அமீர் ஆரம்பித்திலிருந்தே தாமினி காதல் விவகாரத்தில் சேரனுக்கு ஆதரவாக ஈடுபட்டு வந்தார்.
இதனால் கோபமடைந்த சந்துருவின் சகோதரி கவுரி, சேரன் மகள் விவகாரத்தில் தலையிடுவதற்கு நீ யார் என்று கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த அமீர் சேரனின் மகளும் என்னுடைய மகள் தான் என்று கூறியுள்ளார். மேலும் சந்துருவின் குடும்பமானது முழுக்க முழுக்க பணம் பறிக்கும் கும்பல். சந்துருவின் அக்கா பத்மா ராமநாதபுரத்தை சேர்ந்த ஏற்கனவே திருமணமாகியிருந்த இலியாஸ் என்பவரோடு ரகசியமாக குடும்பம் நடத்தி அவரை ஏமாற்றி அவரிடமிருந்து 200 பவுனுக்கும் அதிகமான நகை, ஆந்திராவில் வீடு, லட்சக்கணக்கில் பணத்தை கைப்பற்றியிருக்கின்றனர்.
இதற்காக அவர்களது மொத்தக் குடும்படும் முஸ்லிமாக மாறியுள்ளது, மேலும் சந்துரு மானாமதுரையில் ஒரு வசதியான வீட்டுப் பெண்னை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு பின்பு அவரது குடும்பத்தாரால் துரத்தியடிக்கப்பட்டார். சந்துருவின் குடும்பமே ஒரு மோசடி கும்பல். நல்ல குடும்பமாக மட்டும் இருந்தால் நாங்களே முன் நின்று இந்த காதலை சேர்த்து வைக்க நினைத்தோம். மோசடி கும்பல் என்பதை தெரிந்தும் எங்கள் வீட்டு பெண்ணை எப்படி சேர்ந்து வாழ அனுமதிக்க முடியும் என்று தன் கைவசம் உள்ள சந்துரு குடும்பம் பற்றிய ஆதாரங்களை பத்திரிக்கையாளர்களிடம் காட்டியுள்ளார்.