Sterlite to continue operations
புதுடெல்லி, ஆக. 09: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் மார்ச் 23-ந் தேதி விஷவாயு வெளியேறியதால் சுற்றுப்புற பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக 29-ந் தேதி ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில் சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. நீதிபதி சுவதேந்திரகுமார் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது.
மே 31-ந் தேதி தீர்ப்பாய நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர். மேலும் 4 பேர் கொண்ட குழு ஆலையில் ஆய்வுகளை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். அதன்படி வல்லுநர் குழு ஆய்வு நடத்தி தாக்கல் செய்த அறிக்கையில், ஆலை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய 20 பரிந்துரைகளை ஆலை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஜூலை 15-ந் தேதி இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். வெளியிடப்பட்ட அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தான் விஷவாயு வெளியேறியது என்பதற்கு அறிவியல் ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எந்தவித ஆதாரமும் தாக்கல் செய்யவில்லை. அவசர கால நேரத்தின்போது மாசு ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களை காப்பாற்ற ஆலையை மூட மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு அதிகாரம் உண்டு. ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை முன்னெச்சரிக்கை ஏற்பாடாக ஆலையை மூடச் சொன்னதாக கூறிய விவாதத்திற்கு ஆதாரம் இல்லை.
வல்லுநர் குழு கூறிய 20 பரிந்துரைகளை ஆலை நிர்வாகம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தொடர்ந்து அந்த குழு 2 மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு நடத்தி மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், பசுமை தீர்ப்பாயத்துக்கும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆலையில் அளவுக்கு அதிகமாக சல்பர் டை ஆக்ஸைடு போன்ற வேதிப்பொருட்களை உபயோகப்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும். சிப்காட் பகுதியை சுற்றியுள்ள ஆலைகளில் இருந்து வெளியேறும் விஷவாயுவால் தான் கர்ப்பிணி பெண்களுக்கு கருக்கலைப்பு ஏற்படுகிறதா? என்று சோதனை செய்ய வேண்டும். அதற்கான குழுவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அமைக்க வேண்டும். அதில் மாநில சுகாதாரத்துறை செயலாளர், மாசுகட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர்-செயலர், 2 வல்லுநர்கள், ஒரு மக்கள் பிரதிநிதி ஆகியோர் இடம் பெற வேண்டும். இந்த குழு 6 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ஒருவேளை அந்த ஆலைகளால் தான் பாதிப்பு ஏற்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் அதன்பின் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்யும். இதுபோன்ற தொழிற்சாலைகளால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்ற நலனை கருதியும், பாதிப்புக்கான எந்த ஆதாரமும் இல்லாத காரணத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்குகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary: the National Green Tribunal allowed Sterlite to continue operations
Rejecting Tamil Nadu Pollution Control Board’s contention about gas emissions from Sterlite’s copper smelting plant in Tuticorin, the National Green Tribunal on Thursday allowed the company to continue operations. The board had on March 29 asked Sterlite, a subsidiary of Vedanta , to close the copper smelter unit after it was charged with emission of sulphur dioxide beyond permissible limits. The NGT said the plant could be reopened on May 31. “The facts and circumstances of the present case show that it was not a case of promoting development at the cost of the environment . It has not been established that industrial activity by the company in any way compromises either the environment or the interests of future generations ,” said the final order signed by National Green Tribunal chairperson Justice Swatanter Kumar and other three experts. the National Green Tribunal allowed Sterlite to continue operations