India launched its first aircraft carrier INS Vikrant
உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாராகி வரும் விக்ராந்த் போர்கப்பல் கடலில் இறக்கப்பட்டது . முதல் கட்ட பணிகள் முடிந்ததை தொடர்ந்து விக்ராந்த் போர்கப்பல் கொச்சியில் கடலில் இறக்கப்பட்டது .
இந்த 37,500 டன் எடை கொண்ட போர்கப்பலை பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி, அவரது மனைவி எலிஸபெத்துடன் கலந்து கொண்டு, முறைப்படி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
ஐ .என்.எஸ் .விக்ராந்த் கப்பலின் சோதனை ஓட்டம் 2016 ஆம் ஆண்டு நடைபெறுகிறது . இந்த விமானந்தாங்கி போர்கப்பல் 2018 ஆம் ஆண்டில் இந்திய கடற் படையில் சேர்க்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார் .
Indias first aircraft career-INS Vikrant, placing India in the fifth rank, after US, Russia, Britain and France, who have the ability to design and build aircraft carriers of 37,500 tonnes and above.