indefinite strike in Andhra pradesh for Telangana statehood
தனித் தெலங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியில் நடைபெறும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அரசு ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் போராட்டத்தில் குதித்ததால், அரசுப் பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்து ஊழியர்களும் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் போக்குவரத்து சேவையும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் அண்டைமாநிலங்களில் இருந்து ஆந்திராவிற்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தி வைக்க பட்டுள்ளது. ஆந்திராவில் மின் வாரிய ஊழியர்கள் உள்பட 53 அரசு துறைகளின் ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாநில அரசின் நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த மத்திய,மாநில அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெலங்கானா அறிவிப்புக்கு எதிராக பதவி விலகவேண்டும் என்று ஆந்திரப் பிரதேச அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை அமைச்சர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் 4 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளதாக ஊழியர் சங்கத் தலைவர் பி.அசோக் பாபு தெரிவித்தார்.
இந்த போராட்டத்தில் அத்தியாவசிய துறைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து சென்னையிலிருந்து திருப்பதி உள்பட சீமாந்திர பகுதிக்கு செல்லும் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
English Summary:
The protest in Seemandhra over the central government’s decision to carve out separate Telangana state is set to intensify with the government employees going ahead with their indefinite strike from Monday midnight. Andhra Pradesh Non-Gazetted Officers (APNGO) association, which represents employees of Seemandhra (Rayalaseema and Andhra) announced its decision to go ahead with the strike after its talks with a group of ministers failed.
APNGO president P Ashok Babu said four lakh employees would go on strike as the central and state ministers, MPs and state legislators from Seemandhra have not resigned for keeping the state united as demanded by the employees. Employees from Seemandhra posted in Hyderabad will also participate in the strike, which is likely to paralyse the administration. Employees of state-owned Andhra Pradesh State Road Transport Corporation (APSRTC) and electricity department may join the strike. Employees of various departments have already served strike notices on the chief secretary. APNGO rejected the appeal by the group of ministers to withdraw the strike call. The group of ministers headed by Deputy Chief Minister Damodar Rajanarasimha, who hails from Telangana, held talks with the APNGO leaders.