Srilanka Religious issue
இலங்கை தனி பெளத்த நாடு: பொது பல சேனாவின் தலைவர் வண கிரம விமலஜோதி தேரர் பேச்சு
இலங்கை பல்லின சமய நாடல்ல. இது ஒரு தனி பெளத்த நாடு. 2,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எமது கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என பொது பலசேனா அமைப்பின் தலைவர் வண கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.
பொது பலசேனா வின் குருணாகல் மாவட்ட மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை குருணாகல் சத்தியவாதி மைதானத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை ஒரு சிங்கள நாடு. உலகில் வேறு சிங்கள நாடுகள் இல்லை. முஸ்லிம், கிறிஸ்தவக் குழுக்கள் சிங்கள பெளத்தர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி மதம் மாற்றி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர் இந்தச் செயற்பாட்டை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார், இல்லாவிடின் அவர்களை ஓட ஓடத் துரத்துவோம் என எச்சரித்த தேரர் முஸ்லிம் குழுக்கள் தங்கள் செயற்பாடுகளை முஸ்லிம் நாடுகளுக்குச் சென்று மேற்கொள்ள வேண்டும் எனவும் பெளத்த நாட்டில் இதற்கு இடமில்லை என்றும் தெரிவித்தார்.
முஸ்லீம்கள் கூடுதலாக பிள்ளைகளைப் பெற்று தமது இனத்தை பெருக்கி வருவதாக குற்றம் சாட்டிய தேரர் அதைப்போவே பெளத்த குடும்பத்தில் கூடுதலாகப் பிள்ளைகளைப் பெற வேண்டும் என்றும் மேலும் குறிப்பிட்டார்.
Srilanka Religious issue
News Courtesy: yarl.com