Chess training for Tamilnadu Government School teachers
திருப்பூர்: தமிழக அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பள்ளிகளில் செஸ் போட்டி நடத்தி பரிசு வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. முதல்கட்டமாக திருப்பூர் மாவட்டத்தில் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர் களுக்கு செஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் மூன்று இடங்களில் உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் வகுப்பு ஆசிரியர்களுக்கு செஸ் பயிற்சி தரப்படுகிறது.
தாராபுரத்தில் 444 ஆசிரியர்கள், உடுமலையில் 241, திருப்பூரில் 549 என மொத்தம் 1,234 ஆசிரியர் களுக்கு வரும் 20ம் தேதி, அந்தந்த மையங்களில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் 23ம் தேதி நடக்கும் போட்டிக்கு முன்னதாக, மாணவர்களை தயார்படுத்த வேண்டும். இரண்டாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை, நான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை, ஏழாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை என்ற பிரிவுகளில் மாணவர்களை பிரித்து, போட்டி நடத்தப்படும். அவர்களில் தேர்வாகும் மாணவர்களுக்கு மீண்டும் போட்டி நடத்தி, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.